22ம் தேதி காதலரை திருமணம் செய்யும் நடிகை பாவனா ஆனால் அழைப்பு

திருவனந்தபுரம்: நடிகை பாவனாவுக்கும், தயாரிப்பாளர் நவீனுக்கும் வரும் 22ம் தேதி திருச்சூரில் திருமணம் நடைபெற உள்ளது.

பிரபல நடிகை பாவனா கன்னட பட தயாரிப்பாளர் நவீனை காதலித்து வந்தார். அவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேரளாவில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்தது.

நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு நடிகை மஞ்சு வாரியர் உள்பட 16 பேரை மட்டுமே அழைத்திருந்தனர்.

நிச்சயம் 
வைரல்

நிச்சயதார்த்த புகைப்படம் எப்படியோ கசிந்து சமூக வலைதளங்களில் வைரலானது. 5 ஆண்டுகளாக காதலித்து வரும் நவீன், பாவனா சில காரணங்களால் திருமணத்தை தள்ளிப் போட வேண்டியதாகிவிட்டது.

திருமணம் 
கேரளா

வரும் 22ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள லுலு கன்வென்ஷன் சென்டரில் பாவனா, நவீன் திருமணம் நடைபெறுகிறது. அதன் பிறகு திருமண வரவேற்பும் நடக்கிறது.


விருந்தாளிகள் 
நண்பர்கள்

திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தார், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு திரையுலகினர் உள்பட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

நவீன் 
காதல்

பாவனா ஹீரோயினாக நடித்து 2012ம் ஆண்டு வெளியான ரோமியோ கன்னட படத்தை தயாரித்தவர் நவீன். அதில் இருந்தே அவர்கள் காதலித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து இதுதான்