உடலினுள் இதை செலுத்தி தான் மாணவர் சரத்பிரபு தற்கொலை செய்துள்ளார் விசாரணையில் தகவல்

டெல்லி விடுதி கழிவறையில் தமிழக மாணவரான சரத்பிரபு பொட்டாசியம் குளோரைடை உடலுக்குள் செலுத்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று டெல்லி காவல்துறையினர் கூறியுள்ளனர். 

சரத்பிரபுவுடன் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுடன் நடைபெற்ற விசாரணையின் பேரில் இந்த தகவலை கூறுவதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்தனர். 

திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தை சேர்ந்த மாணவர் சரத்பிரபு யூ.சி.எ.எம்.எஸ் மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.எஸ் படித்து வந்தார். 

திடீரென இன்று காலையில் அந்த மாணவர் சரத்பிரபு எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சரத்பிரபு +2 தேர்வில் 1187 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதனையடுத்து அவர் கோவையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்து பின்னர் கேரள மாநிலம் திருச்சூரில் நீட் தேர்வுக்காக பயிற்சி மேற்கொண்டு எம்டி, படிப்புக்கான நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். 

இந்நிலையில், டெல்லி பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள யூ.சி.எ.எம்.எஸ் எனும் மருத்துவக் கல்லூரியில் எம்.டி படித்து வந்த அவர் இன்று காலை மர்மமான முறையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

தனது கையில் ஊசி போட்டுக்கொண்டு தான் மாணவர் சரத் பிரபு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால் சரத்பிரபு என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. 

மாணவர் சரத்பிரபு இறந்தது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் அவசர அவசரமாக டெல்லி விரைந்துள்ளனர்.

விடுதியில் மாணவர் சரத்பிரபுவுடன் அவரது நண்பர் அரவிந்த் என்பவர் தங்கியிருக்கிறார். அவர் தான் இன்று காலை திடீரென சரத்தின் பெற்றோரை தொலைபேசி மூலம் தொடர்பு சரத்பிரபு விடுதி கழிவறையில் விழுந்துவிட்டதாகக் கூறியுள்ளார். 

அதனையடுத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டு சரத்பிரபு இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார். சரத்பிரபுவின் இத்தகைய மரணம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் சரத்பிரபுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் சரத்பிரபு தற்கொலை செய்து கொண்டதாக கருதுவதாக டெல்லி காவல்துறையினர் கூறியுள்ளனர். 

சரத்பிரபுவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட விடுதி கழிவறையில் ஊசி கண்டெடுக்கப்பட்டதாகவும், மேலும் பொட்டாசியம் குளோரைடு கண்டெடுக்கப்பட்டதாகவும் டெல்லி காவல்துறையினர் தெரிவித்தனர்.

பொட்டாசியம் குளோரைடை ஊசியின் மூலம் தனது உடலினுள் செலுத்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் இது உடனடியாக நரம்புகளை முடக்கிப் போடக்கூடியது என்றும் உடன் தங்கியிருந்தவர்களுடன் நடத்திய விசாரணையில் இந்த தகவல் தெரியவந்ததாகவும் டெல்லி காவல்துரையினர் கூறினார். 

ஆனால் அதே நேரத்தில் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத தன்னுடைய மகன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார் மாணவர் சரத்பிரபுவின் தந்தை செல்வமணி.

இவர் யார் என்று தெரிகிறதா அனைவருக்கும் மிகவும் பிடித்த அந்த பிரபலத்தை பெற்றெடுத்த தாய்