ஒருவேளை நான் மூடத்தனமாக சிந்தித்தால் இது என்னை எச்சரிக்கும் என பயப்படுகிறேன்

நடிகர் விஜய்சேதுபதிக்கு தந்தை பெரியார் கழகம் சார்பில் சிறப்பு விருதுஒன்று வழங்கப்பட்டது. இதனை அவரது பிறந்தநாளன்றே வழங்கி சிறப்பித்தது பெரியார் கழகம்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருதினை பெற்றுக்கொண்ட நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, “பகுத்தறிவாளர்கள் முன்னாள் பேச எனக்க பயமாக உள்ளது. இந்த விருதினை வாங்கியதில் எனக்கு மகிழ்ச்சி. ஒரு வேலை நான் மூடத்தனமாக சிந்தித்தால் இந்த விருது என்னை பயமுறுத்தி , எச்சரிக்கை செய்யும் என நினைக்கிறன். எப்போதும் எல்லா இடத்திற்கும் நான் செல்வேன்.

என் நண்பனின் ஜாதியோ, மதமோ நான் தெரிந்துகொண்டது கிடையாது. தெரிந்துகொள்ள அவசியமும் இல்லை. என்னுடைய கஷ்டகாலங்களில் என்னுடன் இருந்தது என்னுடைய நண்பர்கள் தான். நான் சந்தோசமாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி நான் இஷ்டத்துக்கு சிரித்து பேசி மகிழ்கிறேன் என்றால் அது வாழ்வில் எனக்கு கிடைத்த நண்பர்களால் தான் என உருக்கமாக கூறினார்.

இரவு நேரத்தில் டீக்கடை டீக்கடையாக சுற்றித்திரிந்த சூர்யா என்ன காரணம் தெரியுமா