கைமாறும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி

கடந்த அதிக மக்களால் பார்க்கப்பட்ட டிவி நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். டிவி பார்க்காதவர்களையும் பார்க்க வைத்த இந்த நிகழ்ச்சி இந்தியில் பிரபலமான நிகழ்ச்சியாகும். இதையடுத்து விஜய் டிவியில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி, பல சர்ச்சைகளை எழுப்பினாலும், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

 

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் மக்களிடம் பிரபலமானதோடு, திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

 

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதி விரைவில் ஓளிபரப்பாக உள்ளது என்றும், அதில் பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ் பிக் பாஸ் சீசன் 2 விஜய் டிவியிடம் இருந்து கலர்ஸ் சேனலுக்கு கைமாறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்தியில் பிரபல சேனலான கலர்ஸ் விரைவில் தமிழிலும் அறிமுகமாக உள்ளது. தமிழில் அறிமுகமாகும் போது பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியோடு அறிமுகமானால்  மக்களிடம் ரீச் ஆகலாம் என்பதால், பிக் பாஸ் சீசன் 2 வை அந்த சேனல் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்யும் வாரிசு நடிகர்