வானில் பறந்து அந்தரத்தில் தொங்கிய மகிழுந்து பரபரப்பில் மக்கள்

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மகிழுந்து(கார்) ஒன்று வீதித் தடுப்பில் மோதி, வானில் பறந்து அருகிலிருந்த கட்டடத்தின் மாடியில் பாய்ந்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமானது, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க நாட்டின், கலிபோர்னியாவின் தென் பகுதியில் உள்ள சாண்ட்டா அனா பகுதியின் வீதியில், அதிகாலை வேளையில் வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த வெள்ளை நிற சொகுசு மகிழுந்தானது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. பின்னர் மோதிய வேகத்தில் சுமார் 20 அடி உயரத்திற்கு வானில் பறந்து, அருகில் இருந்த ஒரு கட்டடத்தின் மாடி ஜன்னலுக்குள் பாய்ந்து, சொருகி நின்றது.

நோயாளிகள் சம்பந்தப்பட்ட கோப்புகளை சேமித்து வைத்திருக்கும் கிளினிக்கின் அறைக்குள் புகுந்த மகிழுந்தானது, பின்பக்கத்தின் பெரும்பகுதி அந்தரத்தில் தொங்கியபடி நின்ற காட்சியைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், பாரந்தூக்கியின் உதவியுடன் மகிழுந்தை அப்புறப்படுத்தியுள்ளனர். மகிழுந்தை செலுத்திச் சென்றவர் பற்றிய விபரங்கள் எவையும் இதுவரை வௌியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த துணை நடிகருக்கான விருது இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்