அஜித்தை நான் எப்போதுமே இப்படிதான் அழைப்பேன் நடிகை அனுஷ்கா பேட்டி

என்னை அறிந்தால் படம் அஜித்தின் திரைப்பயணத்தில் ஒரு மறக்க முடியாத படம். அஜித்தின் மாஸ் ஃபார்முலாவை தாங்கி க்ளாஸ் லுக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம் “என்னை அறிந்தால்”.

இந்த படத்தில் அனுஷ்கா – அஜித் ஜோடி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மீண்டும் இவர்கள் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது பல ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார் நடிகை அனுஷ்கா. அப்போது அவர் கூறியதாவது, “அஜித்தை நான் எப்போதும் சாக்லேட் பாய் என்று தான் அழைப்பேன், எல்லோரிடமும் எப்படி மரியாதையாக நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு அஜித்தான் ஒரு எடுத்துக்காட்டு, எல்லோரைரையும் சமமாக மதிக்க கூடிய ஒரு நல்ல மனிதர் அஜித்” என்று கூறியுள்ளார்.

ஹீரோக்களுடன் ஜோடி போட நயந்தாரா போடும் கண்டிஷன்