நேற்று ஒளிபரப்பப்பட்ட மெர்சல் படத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்தீர்களா

நடிகர் விஜய் நடித்து அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தின் வசனங்களுக்கு பா.ஜ.கவின் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.  

மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்கள் அப்படத்தில் இருந்ததால் பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதோடு மருத்துவர்களைப் பற்றிய சில காட்சிகளுக்கு மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. பல்வேறு எதிர்ப்புகளையும் மீறியும் மெர்சல் நல்ல வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இந்தப் படம் முதல்முறையாக ஒளிபரப்பாகியது.  

அப்போது இப்படத்தில் இடம் பெற்றிருந்த குறிப்பிட்ட சில சர்ச்சைக்குரிய வசனங்களை மட்டும் அந்த தொலைக்காட்சி மவுனமாக்கி இருந்தது.

நேற்று ஒளிபரப்பும் போது அப்படத்தில் காமெடி நடிகர் வடிவேல் பேசும் டிஜிட்டல் இந்தியா என்னும் வசனமும், கோயிலுக்கு பதில் மருத்துவமனை கட்டலாம் என்று விஜய் பேசும் வசனமும் மவுனமாக்கப் பட்டிருந்தது. 

அது போலவே ஜி.எஸ்.டி என்னும் வார்த்தை வரும் காட்சியில் அந்த வார்த்தை மவுனமாக்கப் பட்டிருந்தது. இதனால் ரசிகர்களிடையே ஏமாற்றம் ஏற்படும் என்பதாலோ என்னமோ,  ஆளப்போறான் தமிழன் என்னும் பாடல் இருமுறை ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் இந்த பெண் வேடத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா