3 பிரபலங்கள் வெளியிட்ட கார்த்திக் கவுதம் கார்த்திக்கின் மிஸ்டர் சந்திரமௌலி பர்ஸ்ட் லுக் போஸ்டர்

தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் என்று மூன்றே படங்கள் எடுத்திருந்தாலும் , ட்ரெண்டியாக படம் எடுக்கக் கூடியவர் என்ற பெயர் எடுத்தவர் திரு. திருவின் இயக்கத்தில் கார்த்திக், கௌதம் கார்த்திக் இணைந்தும் நடிக்கும் படம் சந்திரமௌலி. இப்படத்தின் பட பூஜை, டைட்டில் போஸ்டர் பற்றி நாம் முன்பே நம் தளத்தில் சொல்லி இருந்தோம்.

ரெஜினா கேசன்ட்ரா, வரலட்சுமி சரத்குமார்,  சதீஷ், இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், சந்தோஷ், ‘மைம்’ கோபி, ஜெகன், விஜி சந்திரசேகர் ஆகியோர் நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. தனஞ்சயன் தயாரிக்கிறார். விக்ரம் வேதா’ படப் புகழ் சாம்.சி. இசை அமைக்கிறார். டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு. ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு

mister chandramoulie

ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கல் ஸ்பெஷல் ஆக இப்படத்தின்  3 வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை  விஷால், ஆர்யா, குஷ்பூ தங்களது டிவிட்டர் பக்கங்களில் தனி தனியே  வெளியிட்டுள்ளனர்.

 

இந்த போஸ்டர்கள்  ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது

ஒருவர் காதலில் விழுந்துவிட்டார் என்பதை இந்த அறிகுறிகளை கொண்டு அறியலாம்