விவசாயியாக கார்த்தி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியிட்டார் சூர்யா

டி என்டர்டெயின்மென்ட்

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் இதுவரை நான்கு படங்கள் தயாரித்துள்ளது . இரண்டு படங்களில் ஜோதிகா ஹீரோயின் மற்ற படங்களில் சூர்யா ஹீரோ.{24, 36 வயதினிலே, பசங்க-2, மகளிர் மட்டும்}

இந்நிறுவனத்தின் ஐந்தாவது தயாரிப்பாக உருவாகம் படத்தில் கார்த்தி தான் ஹீரோ பாண்டியராஜ் தான் இயக்குனர் என்ற தகவலை நாம் முன்னரே தெரிவித்திருந்தோம். ‘மேயாத மான்’ பிரியா பவானி ஷங்கர் மற்றும் ‘வனமகன்’ படப்புகழ் சாயிஷா கதாநாயகியாக நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்தியுடன் இணைந்து காமெடி புரிகிறார் சூரி. சத்யராஜ் மற்றும் பானுப்ரியா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Movie Pooja

கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் காரைக்குடியில் நடைபெற்றது. இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டரை சூரிய உழவர் திருநாளான நேற்று வெளியிட்டார்.

இப்படத்தில் கார்த்தி கிராமத்தில் விவசாயம் செய்யும் சின்ன பாபு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சிகப்பு சட்டை, சிகப்பு துண்டு, சிகப்பு புல்லட் மற்றும் விவசாயி பிளேட்டுடன் கார்த்தி இருப்பது போன்ற போட்டோ வெளியாகி உள்ளது.பைக்கின் பின்புறத்தில் ஏர் பூட்டிய மாடுகள் நிற்கிறது.

kadai kutti singam

இப்படத்திற்கு “கடை குட்டி சிங்கம்” என்ற தலைப்பு வைத்துள்ளனர். மேலும் ” பயிர் செய்ய விரும்பு ” என்ற டேக் லைன் வேறு வைத்துள்ளனர்.

karthi kadai kutti singam

தமிழ் மற்றும் தெலுங்கில் என இரண்டு மொழிகளிலும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.

யாராவது இப்படி யோசித்திருப்போமா பாலமேடு ஜல்லிக்கட்டு மைதானம் முழுவதும் தேங்காய் நார்கள்