மூன்று வயது பெண் குழந்தை ஷெரீன் கொலை வழக்கு

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் மர்மமான முறையில் இறந்த 3 வயது சிறுமியின் இந்தியாவை சேர்ந்த வளர்ப்பு தந்தைக்கு எதிராக, கொலை குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் புறநகரில் இந்தியாவை சேர்ந்த, வெஸ்லி மேத்யூஸ் அவர் மனைவி சினி மேத்யூஸ் ஆகியோர் பீஹாரைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை ஷெரீன் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

குறித்த குழந்தை 2017 ஆண்டு  ஒக்டோபர் மாதம் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் உள்ள பாலத்தின் கீழ் மர்மமான முறையில் இறந்த நிலையில் இருந்துள்ளது . இந்த சம்பவம் குறித்து  பொலிசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக வெஸ்லி மேத்யூசும் அவரது மனைவியும் பதில் அளித்தனர்.

குழந்தை பால் குடிக்காததால் அதை மிரட்டி வீட்டின் வெளியே நிற்கச் செய்ததாகவும் பின் அக்குழந்தை காணாமல் போனதாகவும், அவர்கள் கூறினர். இருப்பினும் குழந்தையை வெஸ்லி பல முறை அடித்ததனால் மரணம் அடைந்தமை விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் வெஸ்லிக்கு எதிராக, ஹூஸ்டன் நீதிமன்றத்தில் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குழந்தையை கவனிக்காமல் கைவிட்டதாக சினி மேத்யூஸ் மீது குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், வெஸ்லிக்கு மரண தண்டனையும், சினி மேத்யூசுக்கு, 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரவு படுக்கும் போது எலுமிச்சை தோலை சாக்ஸில் வைத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் என்ன