இறந்தும் கூட விட்டு வைக்கவில்லையா அவரை எம்ஜிஆரை கொன்று புதைத்த தற்போதையஅமைச்சர்கள்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்து ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்தை தாண்டிய நிலையிலும், அவரது நிலைத்த புகழும், நிகரில்லா அழகும், நீதி உரைத்த அவரது தெளிவும், நேர்மைக்கே எந்நாளும் அஞ்சாது வாழ்ந்திட்ட அவரது நேர்மைத் திடமும் இன்றும் தமிழக மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்று அழைக்கப்பட்டார்.

இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார்.

காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்ததால், அவருடைய இளம்வயதிலேயே இந்திய நேஷனல் காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், தமிழ் திரையுலகை முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செய்தார். பின்னர், திமுக அரசியல் கட்சியுடன் கைகோர்த்தார்.

ஒரு தமிழ் நடிகர் என்ற மகத்தான புகழ் பெற்றிருந்தாலும், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் சமமான வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையையும் அனுபவித்தார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டப்பின், அவர் தனது சொந்தக் கட்சியான அ.தி.மு.கவை உருவாக்கினார்.

மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க முக்கிய காரணம், அவர் ஏழை மக்களின் இதய தெய்வமாக விளங்கினார்.

நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியை ஆக்ரமித்த, முதல் இந்திய திரையுலக பிரமுகர் என்ற பெருமை எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களையே சேரும்.

ஒரு நடிகராக இருந்து அரசியலில் பதவி அடைந்த போதும், அவர் ஏழைகளின் தோழனாகவும், இல்லாதோருக்குக் கொடையாளியாகவும் விளங்கினார். தனது மனிதநேய பண்புகளால் அன்பு செலுத்தியதால் பெருமளவில் பிரபலமானார்.

வருகின்ற 17 ஆம் தேதி எம்ஜிஆரின் 101 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் அதிமுகவினர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், வைக்கப்பட்டுள்ள பேனர்களில் எம்ஜிஆரின் 101 ஆவது நினைவு நாள் எனக் குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், ஆர்.துரைக்கண்ணு பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டிருப்பது பொதுமக்களின் கேலிக்குள்ளாகியுள்ளது.

அதுசரி, முதலமைச்சரே கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என ஆணித்தரமாகக் கூறும்போது, நிர்வாகிகளும் அப்படித்தானே இருப்பார்கள்.

சொல்லி வைத்ததை போல இப்படி நடக்குமா துள்ளி எழுந்த இந்திய வீரர்கள் விறு பற என்று பறக்கும் ஆட்டம்