பட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்தும் படுத்து தூங்கிய அண்ணனின் படம் புலம்பல் புராணம் பாடும் ரசிகர்கள்

கூட்டத்தை தானா செத்துறேன் என்று சொடக்கு போட்ட அண்ணன் நடிகரின் படம் பல்பு வாங்கி நிற்கிறது. முதற்பாதியில், படத்தை விறுவிறுவென கொண்டு சென்று, இரண்டாம் பாதியில் என்னென்னமோ செய்யப்போகிறார்கள் என்று ஆவலுடன் வந்த ரசிகர்களை தான் வச்சி செய்துள்ளார்கள்.

படத்தை சுமார் ஒரு ஆண்டு காலமாக தட்டு தடுமாறி எடுத்துவிட்டார்கள். படத்தை திரும்ப திரும்ப பார்த்து ஒகே ஆகததால் பல காட்சிகளை வெட்டி வீசினார்கள். பிறகு, ரீ ஷூட் எல்லாம் செய்து ஒட்ட வைத்தார்கள். இறுதியில், இந்த படத்தை தான் இத்தனை நாளை உக்காந்து எடுத்துட்டு இருந்தீங்களா..? என்று விமர்சனங்கள் பறக்க ஆரம்பித்தன.

ஆனால், அண்ணனின் ரசிகர்களோ..? அதையெல்லாம் நம்பாதிங்கோ.! படம் பக்கா மாஸ்..! அவர்கள் எல்லாம் வேறு நடிகரின் ரசிகர்கள் அண்ணன் படத்தை ப்ளாப் ஆக்க பாக்குறாங்க என்று ஒருபக்கம் புலம்பல் புராணம் பாடி வந்தனர்.

மை டியர், இயக்குனரே படத்தை எடுக்குறேன்-ன்னு சொல்லிட்டு உங்க ஆளுக்கூட ஊர் ஊரா சுத்திட்டு இருக்கும் போதே தெரியும் இப்படிதான் ஏதாவது வந்து நிற்கும் என்று ஒரு தரப்பு விசிறிகள் அலப்பறையை கூட்டிக் கொண்டிருந்தனர். ஆனால், பொத்தாம் பொதுவாக ஒரு குரல் மட்டும் ஓங்கி ஒலித்தது. என்ன சொல்றாங்க என்று காது கொடுத்து கேட்டால், ” அடேய்..! எதை வேணாலும் மன்னிசுருவோம் டா..! ஆனா, 1980-ல கொண்டு போய் CCTV கேமராவ மாட்டுநீங்க பாருடா..! அதை மட்டும் மன்னிக்கவே மாட்டோம் டா..!” என்று கேட்கிறது.

இருந்தாலும், இந்த படத்திற்கு போட்டியாக வந்த இரண்டு படங்களும் மிக சுமார் ரகத்தை சேர்ந்தவை என்பதாலும், தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை என்பதாலும் ப்ரோமோஷன் செய்து படத்திற்கு கூட்டத்தை  சேர்ந்து விடலாம் என்று திட்டமிட்டிருகிறது படக்குழு.

சேர்ந்தா சரி..!

போகியன்று ஏன் பழையதை கழிக்க சொன்னாங்க அதற்கு பின்னால் இருக்கும் மறைந்து போன சாங்கியம்