ஒரே ஒரு அறிவிப்பால் ஒட்டுமொத்த உலக பணப்புழக்கத்திற்கே சாவுமணி மூத்த மகன் எடுத்த முடிவு

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் தலைமையில் ஜியோகாயின் திட்டத்தை செயல்படுத்த புதிய குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதெல்லாம் பார்த்தால் ஏமாற்று வேலை என்பதை போல தெரியும் ஆனால் நீங்கள் நினைப்பதை விட இது வேறு.

பிட் காயின் என்பது தான் இந்த மூல மந்திரம். இது ஒரு கண்ணுக்கு தெரியாத பணம். கணினியில் மட்டுமே காண முடியும்.

ஆனால் பல நாடுகளின் பொருளாதாத்தையே மாற்றிக்கொண்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா..?

வல்லரசு நாடுகளில் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படும் டிஜிட்டல் பணமான பிட்காயின் மதிப்பு இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

இதன் மூலம் பிட்காயின் சந்தையின் மதிப்பு 15 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. திங்கட்கிழமை வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சுமார் 4,251 டாலராக உயர்ந்துள்ளது.

பங்கு சந்தைகள் பலவிதமான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் பொழுது, பிட்காயின் மதிப்பு 2017ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 320 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து அசத்தியுள்ளது.

இது உலகின் எந்தக் கிரிப்டோகரன்சியும் அடைந்திடாத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிட்காயினை  ஜப்பான் நாட்டில் பணமாகப் பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ள நிலையில், பிட்காயின்-இல் முதலீடு செய்யப்பட்ட 42 சதவீத தொகை ஜப்பான் யென். ஜப்பானில் இப்போது பல கடைகள் பிட்காயினை எவ்விதமான தடையும் இல்லாமல் பெறுகிறது.

தொழில்நுட்பங்கள் விரிவடைந்துள்ள காரணத்தால் கடந்த 7 மாதத்தில் மட்டும் சுமார் 320 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகள் மத்தியில் நிலவும் இப்பிரச்சனையால், முதலீட்டாளர்கள் பிட்காயினைப் பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர். இதன் காரணமாகக் கடந்த சில மாதங்களில் அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வர்த்தகத்தில் தற்போதைய சென்ஷேனலாகவுள்ள பிட்காயின் போல தனியாக கிரிப்டோ கரன்சியை அறிமுகம் செய்ய ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கிரிப்டோகரண்சி வர்த்தகத்தில் இறங்க ஜியோ முடிவு செய்துள்ளது. முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் தலைமையில் 50 இளம் திறமையாளர்களை கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பிட்காயின் பல வருடங்களாக புழக்கத்திலிருந்தாலும், இந்தியாவில் கடந்த சில மாதங்களாக இதன் தாக்கம் அதிகமாகவுள்ளதால் இந்த வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இறங்க முடிவு செய்துள்ளது.

சின்ன வயசுல இருந்து தல தாங்க நமக்கு பிரபல நடிகை ஓபன் டாக்