வசமாக சிக்கிய சசிகலா போயஸ் தோட்டத்தில் கிடைத்த ரகசியம் ஐடி அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

கடந்த நவம்பர் மாதம் 17ம் தேதி மாலை சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்திற்குள் திடீரென வருமான வரித்துறையினர் நுழைந்தனர். 

அன்று இரவு 9 மணியளவில் தான் இந்தத் தகவல்கள் மீடியாக்களில் கசியத் தொடங்கியது. இதனால் போயஸ் தோட்ட பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அன்று நள்ளரவு 1.45 மணி வரை நீடித்த இந்த சோதனையால் அப்பகுதியில் தொண்டர்கள் குவிந்தனர்.

அப்போது இது குறித்து கூறிய வருமானவரித்துறையினர், போயஸ் தோட்டத்தில் சசிகலாவின் 4 அறைகள் மற்றும் ஜெ.,வின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அறை உள்பட 5 அறைகளில் சோதனை நடத்தினோம் என்றும் ஜெயலலிதாவின் அறையை நாங்கள் சோதனையிடவில்லை என்றும் கூறினார்கள்.

இந்த நிலையில், ஜெயலலிதா போயஸ் தோட்ட வீட்டிலுள்ள சசிகலா அறையில் குட்கா ஊழல் பற்றிய ரகசிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது என்றும் மேலும் இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வருமான வரி துறை பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளனர். 

எனக்கும் ஓவியாவிற்கும் திருமணம் ஆகிவிட்டது சிம்பு கூறிய தகவல்