சூர்யாவுக்கு பெயர் இப்படி வில்லனுக்கு பெயர் உத்தமன்

சென்னை : சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கிறது 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம்.

இந்தியில் 2013-ம் ஆண்டு நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியான 'ஸ்பெஷல் 26' படத்தின் கதையை வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் உண்மைச் சம்பவத்தைத் மையமாகக் கொண்டது.

சூர்யா, இப்படத்தில் வின்டேஜ் லுக் சூர்யாவாக செம ஸ்டைலாக நடித்திருக்கிறார். அவரது ஸ்டைலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யா, 'நச்சினார்க்கினியன்' எனும் கேரக்டரில் நடித்திருக்கிறார். நச்சினார்க்கினியன் என்றால் 'நல்லவனுக்கு நல்லவன்' என்று பொருள். இதை படத்திலும் சொல்கிறார் சூர்யா. கீர்த்தி சுரேஷ் மது எனும் ரோலில் நடித்திருக்கிறார்.

நச்சினார்க்கினியன், சி.பி.ஐ வேலைக்கு முயற்சி செய்து, தகுதியிருந்தும் நிராகரிக்கப்படுகிறார். பிறகு அவரே போலி சி.பி.ஐ, இன்கம்டாக்ஸ் அதிகாரியாக மாறி லஞ்ச, ஊழல் பேர்வழிகளை துரத்துவதே 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் கதை.

சூர்யாவின் கேரக்டர் பெயரான 'நச்சினார்க்கினியர்' என்பது தொல்காப்பியத்திற்கு உரையெழுதியவரின் பெயர். இவர் 14-ம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் வாழ்ந்த புலவர். இவர் கலித்தொகை, குறுந்தொகை, சீவக சிந்தாமணி, பத்துப்பாட்டு ஆகிய நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார்.

'நவரச நாயகன்' கார்த்திக் இப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி 'குறிஞ்சி வேந்தன்' எனும் கேரக்டரில் நடித்திருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் அழகு மீனா எனும் கேரக்டரில் நடித்திருக்கிறார். இவர் சி.பி.ஐ அதிகாரியாக போலியாக நடிக்கும்போது, 'ஜான்சி ராணி' எனும் பெயரைப் பயன்படுத்துகிறார்.

 

லஞ்சம் வாங்கும் மூத்த சி.பி.ஐ அதிகாரி உத்தமனாக சுரேஷ் சந்திர மேனன் நடித்திருக்கிறார். லஞ்சம் வாங்கும் அதிகாரிக்கு உத்தமன் என சர்காஸ்டிக்காக பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சூர்யா போலி ரெய்டில் ஈடுபடும்போது உத்தமன் எனத்தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு தேவையா அடங்காத விஜய் மல்லையா