ரசிகர்களை கவ்விப் பிடித்த டாப் 6 இளம் ஹீரோயின்கள் 2017

தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் சீனியர் நடிகைகள் லீட் ரோல்களை தேர்ந்தெடுத்து நடிக்கும்போது இன்னொரு பக்கம் இளம் ஹீரோயின்கள் வரிசையாக படங்களில் நடித்து குவிக்கிறார்கள். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஃபார்முலா போல...

தமிழுக்கு இரண்டாவது ரவுண்டு வந்திருக்கிறார். தமிழில்தான் அறிமுகமானார். இங்கே ஜொலிக்கவில்லை. தெலுங்குப் பக்கம் போனவர் அங்கே நம்பர் ஒன் ஹீரோயின் ஆனார். தெலுங்கு மார்க்கெட்டை குறி வைக்கும் தமிழ் சினிமாக்காரர்களின் தேர்வாக இப்போது ரகுல்ப்ரீத் சிங் இருக்கிறார். இந்த ஆண்டு ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று என இரண்டு படங்கள் வெளியாகின. அடுத்த ஆண்டு சூர்யா உட்பட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேரவிருக்கிறார்.

கடந்த ஆண்டு ஜொலித்த கீர்த்தி சுரேஷ் இந்த ஆண்டு கொஞ்சம் டல்லடிக்கிறார். பைரவா, பாம்பு சட்டை என இரண்டு படங்களுமே சுமாராகத்தான் போயின. ஆனாலும் சூர்யா, விஷால், விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சாவித்திரியாக நடிப்பதெல்லாம் குருவி தலையில் பனங்காய். வரட்டும் பார்க்கலாம்.

இந்த ஆண்டு அஜித், விஜய் என இரண்டு பெரிய ஹீரோக்களுடனும் ஒரே நேரத்தில் நடித்தவர் காஜல் அகர்வால். அடுத்தும் பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாகத்தான் நடிக்கவிருக்கிறார். குயின் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். ஜுனியரா சீனியரா என்று நம்மையே குழம்ப வைத்த காஜலுக்கு இன்னும் மெச்சூர்ட் கேரக்டர்கள் செட் ஆகவில்லை. குறும்பு ஹீரோயினாகவே வலம் வருகிறார்.

திருமணத்துக்கு பின்னும் கூட சமந்தாவுக்கு மார்க்கெட் குறையவில்லை. விஷால், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது. திருமணத்துக்கு பின் வரும் சின்ன பின் தங்கலை கிளாமர் ஃபோட்டோக்கள் மூலம் இல்லாமல் செய்துவிட்டார்.

2017 ல் 5 படங்கள், இந்த ஆண்டு 3 படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன என டாப் கியரில் வேகமெடுத்தாலும் கூட தனது கேரக்டர்களை தேர்வு செய்வதில் கோட்டை விடுகிறார் நிக்கி கல்ராணி. ஹரஹர மஹாதேவகி போல அடல்ட் படங்களில் வேறு சிக்கிக்கொள்கிறார். தேர்வில் தெளிவாக இருந்தால், அம்மணிதான் இப்போதைக்கு நம்பர் ஒன்!

2017 ல் 3 படங்கள், அடுத்து ஆறு படங்கள் என ரெஜினாவின் தெலுங்கு மார்க்கெட்டை குறி வைத்து வாய்ப்புகள் குவிகின்றன. ரகுல்ப்ரீத் சிங் போலவே தமிழ் கண்டுகொள்ளாமல் விட்டு பின்னர் அழைக்கப்பட்டவர்தான் ரெஜினா.

கடந்த ஆண்டு இந்த வரிசையில் இடம் பிடித்து 2017 இல் ஓரிரு படங்களில் நடித்தும் கூட சரியான வரவேற்பை பெறாததால் ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா, தமன்னா, மஞ்சிமா மோகன் ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

கதையும் கேரக்டரும் தான் ஒரு நடிகையின் இடத்தை தீர்மானிக்கின்றன. நல்ல கதைகளாகவும் நல்ல கேரக்டர்களாகவும் தேர்ந்தெடுத்தால் முடிசூடா ராணியாக வலம் வரலாம்.

பாகிஸ்தானுடன் மல்லுக்கு நின்ற டிரம்ப் ஒரு டிவிட்டில் இருநாட்டு உறவை முறித்தது எப்படி