அமெரிக்காவில் 8 இலட்சம் இளையவர்களை வெளியேற்றத் தடைவிதிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் 8 இலட்சம் சட்டவிரோத குடியேறிகளான இளையவர்களை வெளியேற்றும் திட்டத்திற்கு, நேற்று(10.01.2018) சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டுப் பெற்றோரால் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் கொண்டுவரப்பட்ட பிள்ளைகளான இவர்களுக்கு, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பொது மன்னிப்பு வழங்கியிருந்தார். இந்தப் பொது மன்னிப்பை, கடந்த செப்டெம்பர் மாதம் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டார். இதனால், எந்த ஆவணங்களும் இல்லாமல் பணியாற்றி வந்த மேற்படி 8 இலட்சம் பேரின் எதிர்காலம், கேள்விக்குறியானது.

இந்நிலையில், சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தை சேர்ந்த நீதிபதி வில்லியம் அல்சப், டிரம்பின் திட்டத்தை நடைமுறைப்படுத்த தடை விதித்து, உத்தரவிட்டுள்ளது. அத்துடன் 8 இலட்சம் இளையவர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை, வழக்கின் இறுதி தீர்ப்பு வெளிவரும் வரை அமுல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக டிரம்ப் இந்த திட்டத்தை ரத்து செய்வதாகத், தமது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா