அண்ணனுக்கு என்னா சாதா தோச சுத்துற, போட்றா கொத்து பரோட்டா சூர்யா செய்த வேலை

நடிகர் சூர்யா நடிப்பில் வரும் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை விருந்தாக வெளியாகவுள்ள திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம்.

இந்த படத்தின் ப்ரோமோஷன் வேளைகளில் பம்பரம் சுழன்று கொண்டிருகிறது படக்குழு. நடிகர் சூர்யா, சென்னை, ஹைதராபாத், கேரளா என தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு கூட்டத்தை சேர்த்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், கேரளாவிற்கு சென்றிருந்த நடிகர் சூர்யாவை கேரளாவில் உள்ள அவரது ரசிகர்கள் போஸ்டர்கள், ப்ளக்ஸ் பேனர்கள் என தடபுடலாக வரவேற்றனர். அப்போது, ப்ரோமோஷன் நிகழ்சிகள் நடந்த இடத்தில் சொடக்கு மேல சொடக்கு போடுது பாடல் ஒலிபரப்பு செய்தனர். இதனால், குஷியான சூர்யா ரசிகர்கள் ஆட்டம் போடா ஆரம்பித்து விட்டனர். ரசிகர்களின் ஆர்வத்தை பார்த்த நடிகர் சூர்யா சற்றும் எதிர்பாராத வகையில் களத்தில் இறங்கி அயன் படத்தில் வரும் “ஹேய்….! அண்ணனுக்கு என்னா சாதா தோச சுத்துற, போட்றா கொத்து பரோட்டா” என்ற காட்சிக்கு ஏற்றார்போல  செம்ம குத்தாட்டம் போட்டு ரசிகர்களை பரவசநிலைக்கு கொண்டுசென்றுள்ளார்.

 

முன்னணி நடிகர்கள் செய்ய தயங்கும் காரியத்தை நடிகர் சூர்யா செய்தது அங்கிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.