ஆணழகன் பட்டதை வென்ற தமிழனுக்கு ஏற்பட்ட நிலை உலக அரங்கிற்கு செல்ல கூடாதென்று என்ன வேண்டுமானாலும் செய்

ஆசிய அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் பட்டம் வென்ற இலங்கை தமிழரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் ஊக்கமருந்து குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளனர்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தென்கொரியாவில் நடைபெற்ற 51ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தமிழரான லூசியன் புஸ்பராஜ் என்ற இளைஞன் மிஸ்டர் ஏசியா பட்டதை  வென்றிருந்தார்.

இதன் மூலமாக ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இலங்கைத் தமிழர் ஒருவர் வெற்றிபெற்ற சாதனை வரலாறு உருவானது.

இந்த நிலையில், இவர் மீது இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டி ஒன்றின் போது இவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போட்டியின் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 2017ஆம் ஆண்டு ஆசிய ஆணழகன் பட்டதை வென்ற இலங்கை தமிழன் லூசியன் புஸ்பராஜ் மறுத்துள்ளார்.

எனினும் இது தமது புகழுக்கு பங்கம் விளைவிக்கும் செயலாக அமைந்துள்ளதாக புஸ்பராஜ் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் தான் பங்கேற்பதை தடுக்கும் நோக்கமே இந்த சம்பவத்திற்கு பின்னால் இருப்பதாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இருந்த போதிலும் தான் அமெரிக்காவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் நோக்கத்தை  கைவிட போவதில்லை  என்று அவர் தெரிவித்துள்ளார்.

உங்க ஜாதகத்தில் புதன் உச்சமா புத்திநாதன் புதன் தரும் பலன்கள்