கண்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் வரலாற்றுப் பக்கங்கள்

கண்கள் அழகானவை மட்டுமல்ல, உணர்வுகளை வெளிகாட்டும் கருவிகளும் கூட. சிரிப்பு, அழுகை, கோபம், குரோதம், வெறுப்பு, பகை, அச்சம், வியப்பு என ஒரு மனிதனின் அனைத்து வகையான உணர்வுகளையும் வெளிப்படையாக எடுத்துக் காட்டும் கண்ணாடி தான் கண்கள். சிலர் பொய்யாக இருக்கிறார்கள், பொய்யாக அழுகிறார்கள் என்பதை அவர்களது கண்கள் காட்டிக் கொடுத்துவிடும்.

அதனால் தான் இதழ்கள் பொய் பேசினாலும், விழிகள் அதைக் காட்டிக் கொடுத்துவிடும் என கூறுகிறார்கள். ஆயிரம் வார்த்தைகளை ஒரு கிளிக்கில் பதிவு செய்துவிடும் மூன்றாம் கண் என போற்றப்படும் கேமராவில் பதிவான வரலாற்று சிறப்பு மிக்க படங்கள். இவை யாவும் கண்களில் நிறைந்திருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்திய படங்கள் ஆகும்.

கொலம்பியாவின் அர்மேரோ பகுதியை சேர்ந்தவர் இந்த பெண். அங்கே கடந்த 1985ல் நடந்த எரிமலை வெடிப்பு சம்பவத்தில் கட்டிட இடிபாடு, நிலசரிவு மற்றும் காற்றில் அதிக நச்சுக் கலந்த காரணத்தால் உயிரிழந்தவர். இந்த எரிமலை வெடிப்பு சம்பவத்தின் போது அர்மேரோ உட்பட 13 சுற்றுவட்டார கிராமங்கள் பாத்திப்புக்குள்ளாகின. இந்த சம்பவத்தின் போது ஏறத்தாழ 23,000 பேர் உயிரிழந்தனர்.

உடலில் நச்சுக் கலந்து கண்கள் கருப்பாகி பரிதாபமாக விழிகள் திறந்த நிலையிலேயே இறந்து காணப்படும் அப்பாவி பெண்.

Image Source: wikipedia

ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. ஆர்கன்சஸ் அரசு பள்ளியில் கருப்பின மக்களையும் சேர்த்துக் கொள்ள அறிவித்தது. இதனால் லிட்டில் ராக்கில் அமைந்திருந்த சென்ட்ரல் மேல்நிலை பள்ளியில் ஒன்பது கருப்பின மாணவ, மாணவிகளுக்கு இடமளிக்கப்பட்டது.

கருப்பின மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும், அதுவரை அவர்களை ஒரு அடிமைப் போல கண்டு வந்த வெள்ளையர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முன்னேறி செல்லும் கருப்பின மாணவியை முறைத்தும், திட்டியப்படியும், எதிர்த்து கோஷங்கள் இட்டப்படி பின்னே வந்துக் கொண்டிருக்கும் வெள்ளையர் மாணவிகள்.

Image Source: npr

இந்த படத்தில் முறைத்தப்படி பார்த்துக் கொண்டிருப்பவர் ஹிட்லரின் கையாள் கோயபல்ஸ். இந்த புகைப்படத்தை எடுத்த நபர் ஒரு யூத இனத்தை சேர்ந்தவர். அவர் யூத இனத்தை சேர்ந்தவர் என்பதை கண்டறிந்தவுடன் படம் எடுக்க, எடுக்க தனது வெறுப்பு கக்கி முறைத்து காண்கிறார் அந்த புகைப்படக் கலைஞரை.

Image Source: dailymail

இந்த படத்தை எடுத்த நபர் ஜாக் பிராட்லி. இந்த படத்தில் இருக்கும் குழந்தையின் பெயர் ஹரோல்ட். காது கேளாமை குறைபாடு இருந்த இந்த குழந்தைக்கு முதன் முறையாக மருத்துவர் செவி கேட்கும் கருவியை பொருத்திய பிறகு, மிகுந்த சந்தேகத்துடன், ஒலியைக் கேட்டு வியக்கும் சிறுவனின் கண்கள்.

Image Source: pictify

ஹிரோஷிமாவில் நடந்த அணுகுண்டு வெடிப்பை தனது கண்களால் கண்ட சிறுமி. அவரது கண்கள் எப்படி மாறி போயுள்ளது என்பதை காணுங்கள். இந்த கொடூர சம்பவம் நடந்து பல தசாப்தங்களை கடந்து வந்துவிட்டோம். ஆனால், இன்றளவும் அதன் தாக்கத்தால் மரபணு சீரழிவு தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. பலர் தொடர்ந்து உடல் ஊனமுற்ற நிலையில் பிறந்து வருகிறார்கள்.

Image Source: agencevu

ஜெர்மன் சிறையில் கைதான நிலையில் இருந்த அமெரிக்க போர் கைதி, கூட்டணி படைகளால் விடுதலை பெற்று வெளியேறிய போது எடுக்கப்பட்ட படம் இதுவாகும். தன்னிலை மறந்து, முழு மனச்சோர்வில் விறைத்த பார்வையில் உற்றுநோக்கி கொண்டிருக்கிறார்.

Image Source: imgur

குழந்தைகளின் அழகே அப்பாவித்தனமும், வெகுளியாக இருப்பாதும் தான். ஆனால், தனது அப்பாவித்தனத்தை இழந்து, துப்பாக்கி ஏந்தி, சிகரட் பிடித்து புகை ஊதிக் கொண்டிருக்கிறான் இந்த சிறுவன். இவன் தானொரு சிறுவன் என்பதையே மறந்து ஆயுதம் ஏந்தியுள்ளான்.

Image Source: sebastianotomada

இப்படத்தை எடுத்தவர் ஜோடி பைபர். இந்த படத்தில் மூக்கு இழந்து காணப்படும் பெண் பைபி ஆயிஷா. இவருக்கு அப்போது 18 வயது. ஆப்கானில் வாழ்ந்து வந்தார். இவரை கணவர் வீட்டாரை சேந்தவர்கள் கொடுமைப்படுத்தி மூக்கையும், காதுகளையுள் அறுத்தனர். ஆயிஷா இறந்துவிட்டார் என கருதி அவர்கள் தனியே விட்டு சென்றுவிட்டனர்.

ஆனால், பிறகு அமெரிக்க இராணுவம் மற்றும் அக்கம்பக்கத்து நபர்களால் மீட்கப்பட்டு, காப்பாற்றப்பட்டார் ஆயிஷா. பிறகு ஆயிஷாவை அமெரிக்கா அழைத்து சென்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது ஆயிஷா அமெரிக்காவில் தான் வசித்து வருகிறார்.

இந்த புகைப்படத்திற்காக ஜோடி பைபர்க்கு 2010ம் ஆண்டுக்கான சிறந்த பிரஸ் போட்டோ விருது வழங்கப்பட்டது. இதற்கு முன் இவர் எட்டு முறை இந்த விருதினை வாங்கியுள்ளார்.

Image Source: canon-europe

இந்த சிறுவன் கண்களை சபையர் கண்கள் என்பார்கள். அதாவது நீலநிறக் கண்கள். இந்த சிறுவனின் படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்த சில நேரத்திலேயே வைரலாக பரவ ஆரம்பித்தது. இவனது கண்களில் இருந்த ஏக்கம், தூய்மை, அப்பாவித்தனம் போன்றவை மக்களை ஈர்த்தது.

ஆயினும், சிலர் இந்த படத்தை, இந்த சிறுவனின் கண்களை போலி என கூறி விமர்சித்து வந்தனர். ஆனால், இது உண்மையான புகைப்படம். வனேசா ப்ரிஸ்டோ (Vanessa Bristow) என்பவர் தான் இந்த படத்தை எடுத்தவர். இதை போலி என கூறும் நபர்களுக்கு பதில் அளிக்க, அந்த சிறுவனின் மற்றுமொரு படமும் பகிரப்பட்டது.

Image Source: Vanessa Bristow

நீச்சல் அடிப்பதால் என்னென்ன நோய்கள் குணமாகும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க