நாம 10 பேர் பணத்தை போட்டாலே இதை செய்துவிடலாம் சுளீர் காட்டிய அஜித்

மலேசியாவில் நடைபெற்ற தமிழ்திரையுகின் நட்சத்திர விழா பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில், தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் ராட்சசர்கள் அஜித் மற்றும் விஜய் கலந்து கொள்ளாதது நடிகர் சங்க நிர்வாகிகள் பலரையும் வருத்தத்திற்குள்ளாக்கியுள்ளது

இந்நிலையில்,நடிகரும்,  நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலருமான திரு.எஸ்.வி.சேகர் அஜித் குறித்து கூறியுள்ள கருத்து அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

அவர் கூறியுள்ளதாவது, நட்சத்திர கலை விழாவில் கலந்து கொள்ள வருமாறு நடிகர் சங்க நிர்வாகிகள் அஜித்தை நேரில் சென்று அழைத்தனர். ஆனால், அஜித்குமார் அதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார். மேலும், “ஏற்கெனவே நம் படங்களுக்கு மக்களிடம் டிக்கெட் என்ற பெயரில் பணம் வாங்குகிறோம். அதைத் தவிர இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தி அதற்கும் பணம் பெறுவது எதற்காக?, நாம் நன்றாக சம்பாதிக்கிறோம். நாம 10 பேர் பணத்தை போட்டு கட்டடத்தை கட்டிவிடலாம்” என்று மெல்லிய புன்னைகையுடன் அஜித்குமார் கூறியதாக எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ரூ.100 கோடி நஷ்டம் தற்காலிக ஓட்டுநர்களால் 5 பேர் சாவு