அஜித் சிவா கூட்டணியில் மீண்டும் இணைந்த பிரபலம் நாளை வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் அஜித்குமார் – இயக்குனர் சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள படம் விஸ்வாசம்.

இந்த படத்திலும் விவேகம் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டரே இணைவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஜனவரி 19-ந்தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என கூறப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகைகள், மற்ற டெக்னீசியன்கள் பற்றிய தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இருப்பினும், மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தின. பின்னர், அது உறுதிப்படுத்தப்படாத செய்தி என்று கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது அஜித்தின் வேதாளம், விவேகம் படங்களுக்கு இசையமைத்த அனிருத்தே விஸ்வாசம் படத்திற்கும் இசையமைக்கயிருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதுகுறித்த அறிவிப்பு நாளை(ஜனவரி 11) வெளியாகும் என கூறப்படுகிறது.

கீர்த்தியை மிரட்டினாரா நயன்தாராகாரணம் என்ன தெரியுமா