ஊடகங்களின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டது தேசிய விருதை பெற உள்ள தமிழக இளைஞர்

தான் சார்ந்துள்ள பகுதியில், பிச்சைக்காரர்கள் இல்லாத ஊராக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார் நவீன்குமார்.

'அட்சயம்' என்ற அமைப்பின் மூலமாக பிச்சைக்காரர்களை மீட்டுவருகிறார். 

இவரது உன்னத சேவையைப் பாராட்டி, சிறந்த சமூக சேவைக்கான விருதிற்கு இவர் தற்போது தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்

இந்த விருது, வரும் 12-ம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம் அருகே உள்ள நொய்டாவில், தேசிய இளைஞர் திருவிழாவில் வழங்கப்பட உள்ளது என்பது குறிபிடத்தக்கது

'அட்சயம்'  அமைப்பை பற்றிய  சிறு முன்னோட்டம்..

 2014ல் 'அட்சயம்' என்ற அமைப்பு நவீன் மற்றும் இவரது நண்பர்களால் உருவாக்கபட்டது.. 

இதன் முக்கிய குறிக்கோள்..?

குமாரபாளையம், பவானி, ஈரோடு, சேலம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் பார்க் போன்ற இதர பகுதிகளில் பிச்சை எடுப்பவர்களிடம், எடுக்க வேண்டாம் என்று சொல்லி விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதே இவர்களின் தலையாய நோக்கம்

அட்வைஸ் செய்வதோடு நிற்பதில்லை இவர்களின் சேவை..

 அவர்களை மீட்டு, அவர்களின் குடும்பத்துடனோ அல்லது ஹோமிலோ சேர்த்து உரிய பாதுகாப்பு அளிக்கின்றனர் 

இதுவரை 190 பேரை மீட்டுள்ளனர், இதில், 40 பேர் பெண்கள் என்பது மிக முக்கியமானது

இந்த அமைப்பின் இலக்கு,

பிச்சைகாரர்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே என்பதாகும்..

தமிழ்நாட்டில் உள்ள ஒரு அமைப்பு  தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது..

இவர் செய்த அட்வைஸ்ஸால் வந்த வினை இவர் மலேசியாவிற்கு ஏன் போகவில்லை