கொல்லங்குடி கருப்பாயி பாட்டியின் தற்போதைய நிலை கண் கலங்க வைக்கும் சோக பின்னணி

நடிகர் பாண்டியராஜன் நடித்த ஆண்பாவம் என்ற படத்தில் நடித்த கொல்லங்குடி கருப்பாயி பாட்டியை நாம் நிச்சயம் மறந்திருக்கவே மாட்டோம்.

சினிமா மூலம் இந்த பாட்டியின் நாட்டுப்புற பாடல் பட்டித்தொட்டி எங்கும் பரவத் தொடங்கியது. 

ஆண்களை நம்பாதே, கபடி கபடி மற்றும் கோபாலா கோபாலா போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இவர். 

இவருக்கு நடிகர் சங்கத்தின் சார்பில் ரூ. 4000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த பணம் அவருக்கு போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் அவர் தற்போது குடியிருக்கும் வீடு இடியும் நிலையிலுள்ளதாம். 

ஆனால் தான் இதுவரை யாரிடமும் உதவி கேட்டதில்லை என்றும் இனியும் உதவி கேட்க மனமில்லை என்றும் கேட்பதற்கு மிகவும் தயக்கமாக இருக்கிறது என்றும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இவரின் இத்தகைய வறுமை நிலைமையை கண்ட நடிகர் சங்கம் ஏதாவது உதவி செய்யுமா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சிங்கிளாக வந்த தினகரன் எடப்பாடிக்கு ஸ்லீப்பர் செல்ஸ் கொடுத்த அதிர்ச்சி யார் அந்த இருவர்