தனது அமைச்சர்களை விரைவில் மாற்றவுள்ள பிரித்தானியப் பிரதமர்

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, தனது அமைச்சர்களை விரைவில் மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தனது அமைச்சர்களை விரைவில் மாற்றவுள்ள பிரித்தானியப் பிரதமர்!

இன்று மேற்கொள்ளப்படும் அமைச்சரவை மறுசீரமைப்பில் வெளிவிவகார, நிதிவிவகார, உள்நாட்டு விவகார மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிவதற்கான அமைச்சர் ஆகியோர் தொடர்ந்தும், அதே பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் தெரேசா மேயின் அதிகாரம் வீழ்ச்சி அடைந்திருந்தது. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான பேச்சுக்கள், தெரேசா மே தலைமையில் இடம்பெற்றுவருகின்றன.

அத்துடன் உள்நாட்டு கொள்கை பிரச்சினைகளால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களையும் சமாளிக்க வேண்டிய நிலைமை, அவருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதிப் பிரதமரும், நீண்டகாலமாக பிரதமருக்கு நெருக்கமாக இருந்தவருமான டேமியன் கிறீன், பதவி விலகியதை தொடர்ந்து அமைச்சரவை மறுசீரமைப்பு அவசியமாகியுள்ளதாக தெரேசா மே கூறியுள்ளார்.

நாடாளுமன்ற அலுவலகத்திலுள்ள டேமியன் கிறீனின் கனணிகளில், ஆபாச காணொளிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர் பதவி விலக நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.

300 கோடி பட்ஜெட்.! பிரமாண்ட படத்தில் விக்ரம் பாகுபலி2 வை மிஞ்சுமா