300 கோடி பட்ஜெட்.! பிரமாண்ட படத்தில் விக்ரம் பாகுபலி2 வை மிஞ்சுமா

விக்ரம் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் தற்பொழுது ஸ்கெட்ச் படத்தில் நடித்துள்ளார் இந்த படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்துள்ளார்.

மேலும் ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைத்துள்ளார் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

தற்பொழுது ஸ்கெட்ச் படபிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது ,மேலும் இதை தொடர்ந்து துருவ நட்சத்திரம் மற்றும் சாமி2 படங்களில் நடித்து வருகிறார் துருவ நட்சத்திரம் படம் இறுதிகட்ட படபிடிப்பை நெருங்கிவிட்ட நிலையில் விக்ரம் சாமி 2 வில் பிஸியாக இருக்கிறார்.

மேலும் ராவணன் படத்திற்ற்கு பிறகு சில வருடங்களாக பாலிவுட் பக்கம் போகாமல் தமிழ் படங்களில் நடித்துவந்த இவர் மீண்டும் பாலிவுட் படத்தில் கால் பதிக்கிறார்.

இந்த படத்தை ஆர்.எஸ்.விமல் இந்த படத்தை இயக்குகிறார் மேலும் படத்திற்கு மஹாவீர் கர்ணா என தலைப்பை அறிவித்துள்ளார்கள் படக்குழு.

இந்த படத்தின் பட்ஜெட் 300 கோடி பாகுபலி 2 விற்கு இணையாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது அல்லது பாகுபலி2 வை கூட மிஞ்சலாம் மிஞ்சினால் ஆச்சரியபடுவதற்கு இல்லை இந்த படத்தை New York based studio, United Film Kingdom தயாரிக்க இருக்கிறார்கள்.

மஹாவீர் கர்ணா படம் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் வெளிவரும் என அறிவித்துள்ளார்கள்.

குழந்தை நட்சத்திரமாக தோன்றிய இவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா