டோணி வந்தது இருக்கட்டும் சிஎஸ்கே அணிக்கு இவர்தான் பேட்டிங் கோச்சா

டெல்லி: 2018 ஐபிஎல் போட்டி இப்போதே அதிரடியாக தொடங்க ஆரம்பித்துவிட்டது. ஏலம் நடக்க இன்னும் ஒருவாரம் இருக்கிறது.

ஆனால் இந்த ஏலத்திற்கு முன்பாகவே சிஎஸ்கே அணி பயிற்சியாளர்களை நியமிக்க தொடங்கிவிட்டது. அது மட்டும் இல்லாமல் இந்த தொடரை வெற்றி பெறவும் சிஎஸ்கே பலமான திட்டங்கள் தீட்டி இருக்கிறது.

தற்போது சிஎஸ்கே அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய வீரர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். மற்ற பயிற்சியாளர்கள் விரைவில் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

மீண்டும் வந்தனர் 
மீண்டும்

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்ப வந்து இருக்கிறது. இதில் சென்னை அணிக்கு ரெய்னா, டோணி, ஜடேஜா ஆகியோர் திரும்பி இருக்கிறார்கள். இன்னும் ஏலத்தின் போது அஸ்வின் அணியில் எடுக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பேட்டிங் பயிற்சி 
பயிற்சி

இந்த நிலையில் சென்னை அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக மைக்கேல் ஹசி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் இதற்கு முந்தைய ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடியவர். இன்னும் சில தினங்களில் பவுலிங் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

 

என்ன சாதனை 
சாதனை என்ன

மைக்கேல் ஹசி சென்னை அணிக்காக விளையாடிய மிக முக்கியமான வீரர் ஆவர். ரெய்னா, டோணிக்கு அடுத்து ஐபிஎல் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார். சென்னை அணிக்காக ஐபிஎல் போட்டியில் இவர் 1,768 ரன்கள் எடுத்து இருக்கிறார்.


திட்டம் 
திட்டம் என்ன

சென்னை அணி இந்த ஐபிஎல் போட்டியில் கோப்பை ஜெயிப்பதற்கான நிறைய முயற்சிகள் எடுத்து வருகிறது. சென்னை அணியின் பேட்டிங் ஆர்டர் நன்றாக இருப்பதால் பவுலிங்கிலும் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. எனவே ஐபிஎல் ஏலத்தில் பவுலர்கள் அதிகம் ஏலத்திற்கு எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலும் அஸ்வின் அணியின் எடுக்கப்படலாம்.

 

நல்ல திரைக்கதை அமைந்தால் திரையில் ஒளிர்வேன் சரணவனா ஸ்டார்ஸ் அதிபர் பகீர்