வாங்க பேசி தீர்க்கலாம் வடகொரியாவின் குழந்தை சாமி அழைக்கும் டிரம்ப்

வாஷிங்டன்: பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ள டிரம்ப், வடகொரியாவுடன் நேருக்கு நேராக பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

புத்தாண்டையொட்டி வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேசுகையில், அணு குண்டு தாங்கிய ஏவுகணையை செலுத்தும் கருவியின் பட்டன், எப்போதும் என் மேஜையில் தயார் நிலையில் உள்ளது என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய ட்ரம்ப் அணு குண்டு தாங்கிய ஏவுகணை பட்டன் தம்மிடமும் உள்ளது. அது மிகவும் சக்தி வாய்ந்தது என எச்சரித்தார். இரு நாடுகளுக்கு இடையே வார்த்தை போர் தடித்ததால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேச்சுவார்த்தைக்கு தயார் 
ட்ரம்ப் அழைப்பு

இந்நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர் டெனால்டு ட்ரம்ப், வடகொரிய அதிபருடன் எவ்வித நிபந்தனையும் இன்றி நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றார்.


நம்பிக்கை 
வடகொரியா உடன் பேச்சு

தமக்கு அதில் பிரச்னை இல்லை. ஏனெனில் பேச்சுவார்த்தையில் தமக்கு நம்பிக்கை உள்ளது என்றார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வடகொரியா-தென்கொரியாவும் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கொரிய தீபகற்பத்தில் நிலவி வந்த போர் பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குட்டையை குழப்பவா? 
பதற்றத்தை தணிக்கவா?

இந்நிலையில் இரு கொரிய நாடுகளும் சேர்ந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ள டிரம்ப், அதற்கு முன்பாக குட்டையை குழப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் இருகொரிய நாடுகளும் இணைந்து விட்டால், ஆசியாவின் மிக சக்திவாய்ந்த நாடாக கொரியா மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அணுகுண்டு 
அமைதி பேச்சு

இவங்க 2 பேரும் அவங்க நல்லவங்க இல்லையே. அணுகுண்டு தயார்னு சொல்லிய ட்ரம்ப், வடகொரியாவின் குழந்தை சாமியை இப்படி திடீர்னு பேச அழைப்பதன் காரணம் என்பது பற்றிதான் இப்போது சர்வதேச அளவில் முக்கிய பேச்சாக உள்ளது.

அஜித்திடம் திடீர் கோரிக்கை வைக்கும் ரசிகர்கள் ஏதாவது நடக்குமா