சீரியல் நடிகை ப்ரியாவுக்கு கிடைத்த பரிசு குஷியில் ரசிகர்கள்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.

இவர் முதன் முறையாக கதாநாயகியாக நடிகர் வைபவுடன் இணைந்து மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

தனது முதல் படமான இந்த படத்தின் மூலம் அனைவரிடமும் நல்ல பாராட்டுகளை பெற்றார் இவர். இந்த நிலையில் தற்போது இவருக்கு பிரபல வணிக நிறுவனமான போத்தீஸ் நிறுவனம் இளம் சாதனையாளர் என்ற விருதை வழங்கியுள்ளது.

இந்த செய்தியை ப்ரியா மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்களும் பிரியாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அஜித் படத்துக்கு இசையமைக்கிறாரா விக்ரம் வேதா இசையமைப்பாளர்