உலகின் மிக விலை உயர்ந்த மது போத்தல் மர்ப நபரால் திருட்டு

டென்மார்க் தலைநகர் கோபன்ஹகனில் பிரையன் இங்க் பெர்க் என்பவருக்கு சொந்தமான மதுபான கடையில் இருந்த 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது போத்தல் களவாடப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிக விலை உயர்ந்த மது போத்தல் ஆகும்.

அந்த போத்தல் வெள்ளை மற்றும் தங்க நிற மஞ்சள் நிறத்தால் ஆனது. அதன் மூடியில் ரஷியாவின் இம்பீரியல் கழுகு முத்திரை உள்ளது. அத்துடன் அதன் மீது விலை உயர்ந்த வைரமும் பதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய விலை மதிப்புமிக்க 'வோட்கா' மது போத்தல் மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த மர்ம நபர் பூட்டை திருட்டு சாவி மூலம் திறந்து மதுபான கடைக்குள் இருந்த வோட்கா போத்தலை திருடிச் சென்ற காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பணிபுரிந்து வேலையில் இருந்து நின்றவர்கள் மூலம் சாவியை பெற்று இருக்கலாம் என மதுபான கடையின் உரிமையாளர் பிரையன் இங்க்பெர்க் தெரிவித்துள்ளார். ரஷியாவை சேர்ந்த வர்த்தகரிடம் இருந்து கடனுக்காக இதை பெற்றதாக அவர் கூறினார்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

கிழக்கு சீமையிலே படத்தில் நடித்த வில்லன் நடிகரின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா