சினிமா வாய்ப்பை நிராகரித்த தெய்வமகள் வாணி போஜன் காரணம் இது தான்

டிவி சீரியல்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைபவர்கள் சினிமாவிலும் ஹீரோ, ஹீரோயினாக வெற்றி பெறுகிறார்கள். 

 

அந்த வகையில், பிரியா பவானி சங்கர் சீரியலில் நடித்து அதன் மூலம் கிடைத்த ‘மேயாத மான்’ படத்தில் ஹீரோயின் ஆனார். அப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அவர் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள சிவகார்த்திகேயனும் டிவியில் இருந்து வந்தவர் தான்.

 

இந்த நிலையில், பிரபல சீரியல்களில் ஒன்றான ‘தெய்வமகள்’ சீரியலில் சத்யா என்ற வேடத்தில் நடித்து தமிழகத்தின் அனைத்து இல்லங்களிலும் நுழைந்துள்ள வாணி போஜனுக்கும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், அதை அவர் மறுத்துள்ளார்.

 

சீரியலுக்கு பிறகு சினிமா தான், என்று கூறி வந்த வாணி போஜன், சினிமா வாய்ப்பை நிராகரித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்தது. இது குறித்து விசாரிக்கையில், வாணி போஜனுக்கு படத்தில் அனைவரும் புதுமுகங்களாக இருந்ததோடு, படம் தயாரிக்கும் நிறுவனமும் புதியவர்களாக இருந்தார்கள். இதுபோன்ற படங்களில் நடித்தால், எங்கே தனது எதிர்காலம் பாழகிவிடுமோ, என்ற அச்சத்தில் தான் அவர் அதை நிராகரித்தாராம்.

 

வாணி போஜனுக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் தான் என்றாலும், அதற்கான சரியான வாய்ப்பு அவருக்கு இன்னும் கிடைக்கவில்லையாம். நல்ல தயாரிப்பு நிறுவனம், நல்ல கதை மற்றும் இயக்குநர் அமைந்தால் அவர் சினிமாவில் ஹீரோயினாவது உறுதி என்று கூறுகிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரங்கள்.

ரஜினி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் இவர்கள் தான் அதிகமாவார்கள் எச்சரிக்கை செய்தி