ஒரு ஊசி போதும் உலகமே இனி இந்தியாவின் காலடியில் கார்பரேட்டுகளால் கை மீறி போனதெல்லாம் இனி

ஐதராபாத்தை சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் கண்டுபிடித்த டைபாய்ட் தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளித்துள்ளது.

சுற்றுப்புறச் சூழல் சீர்கெடுவதால் ஏற்படுகிற தொற்றுநோய்களில் மிக முக்கியமானது, டைபாய்டு காய்ச்சல்.

மழைக் காலங்களில் தெருக்களில் மழைநீர் தேங்குவதால், குடிநீரும் தெருக் கழிவுகளும் கலந்து நோய்க் கிருமிகள் வாழ வசதியாகிறது.

இதனால் அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம்வரை உள்ள காலத்தை டைபாய்டு காய்ச்சலுக்கான காலகட்டம் என்று சொல்கிறார்கள்.

இது, சிறு குழந்தைகள் முதல் முதியோர்வரை யாரையும் தாக்கும் தன்மை கொண்டது. என்றாலும், எங்கெல்லாம் சுத்தம் இல்லையோ, கழிப்பறை வசதி இல்லையோ, அங்கு வாழ்கிற குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை இந்த நோய் எளிதில் தாக்கிவிடுகிறது.

அறிகுறிகள்

  • ஒரு மாதத்திற்கு மேலாக காய்ச்சல் நீடிக்கும்.
  • மிகவும் சோர்ந்த நிலை, வயிறு வலி, வயிறு உப்புதல்.
  • எடை குறைவு, வேகமாக மூச்சுவிடுதல்.
  • எலும்பு மூட்டுகளிலும் தலையிலும் கடுமையான வலி, பசியின்மை.
  • குமட்டல், வாந்தி, வயிற்றுவலி.

பரிசோதனை

  • WIDAL TEST என்பது டைபாய்டை கண்டுபிடிக்க உதவும் ஆய்வக பரிசோதனை.
  • நோய் தாக்கப்பட்டு 7 நாட்கள் கழித்தே இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும், இல்லையென்றால் இது Positive என்று வரும்.

இந்த நோய்க்கு மருந்துகள் கொடுக்கிறோம் என்ற பெயரில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் களமிறங்கி கொள்ளை இலாபம் பார்த்தனர்.

இவ்வளவு காலஏமாற்றத்தை தவிடு பொடியாக்கும் வண்ணம், பாரத் பயோ டெக் என்னும் நிறுவனம் டைபாய்ட் கான்சுகேட் வாசின் என்னும் தடுப்பு மருந்தை கண்டு பிடித்துள்ளது.

இந்த தடுப்பு மருந்து ஊசி வடிவில் வருகிறது. இந்த மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம்  அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்த தடுப்பூசி ஆறு மாதக் குழந்தைகள் முதல் வயதானவர் வரை உபயோகப்படுத்தலாம் எனவும் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001 முதல் இந்த தடுப்பூசி பல நிலைகளில் பரிசோதிக்கப்பட்டு தற்போது அங்கீகாரம் பெற்றுள்ளது.

இந்த அங்கீகாரத்தின் மூலம் இனி இந்த தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் உபயோகப் படுத்த முடியும். இதன் மூலம் டைபாய்ட் காய்ச்சல் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதற்கு முன்னதாக, டைபாய்ட் காய்ச்சல் தடுப்பு மருந்தாக உலக சுகாதார நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மருந்தை அங்கீகரித்து இருந்தது

திருமணம் ஆன இரண்டாவது வாரமே திவ்யதர்ஷினி செய்த காரியம் விவாகரத்தின் உண்மை பின்னணி