பிரபல தொகுப்பாளர் தற்கொலை முயற்சி காரணம் அந்த பெண் தானா

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரதீப் குடிபோதையில் வாகனம் ஓட்டி காவல்துறையினரிடம் சிக்கிய நிலையில் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தெலுங்கு தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு தற்போது நடிகராகவும் வலம் வருபவர் பிரதீப் (32).

இவர் ஏற்கனவே குடித்து விட்டு கார் ஓட்டியதால் காவல்துறையினரிடம் சில தடவை சிக்கிய நிலையில் சமீபத்தில் மீண்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்கிக் கொண்டார்.

அப்போது காரில் பிரதீப்புடன் இளம் பெண் ஒருவரும் இருந்த நிலையில் பிரதீப்பை காவல்துறையினர் கைது செய்தார்கள்.

இதனையடுத்து அவர் சிறை தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காகவும், தன்னுடன் வந்த அந்த பெண்ணை பற்றி காவல்துறையினர் விசாரிக்காமல் இருப்பதற்காகவும் பிரதீப் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இருப்பினும் பிரதீப்பின் உயிருக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரின் காரை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர் இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

கருப்பன் குசும்புக்காரன் காவலன்னு சொல்லிக்கிட்டு துணை முதல்வர் போஸ்டுக்கு அடி போடுறான்