குறுக்கே வந்த ஜோதிடம் சர்ச்சை நாயகியை முதல்வராக்குவாரா ரஜினி

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சர்ச்சை நாயகியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தனிக்கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதையடுத்து ரஜினிமன்ற இணையதளத்தில் ஆட்களை சேர்க்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

அரசியல் வேலைகள் ஒரு பக்கம் நடந்தாலும், மக்கள் பலர் ரஜினியை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரஜினி 
அமைதி

இத்தனை ஆண்டுகளாக மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாத ரஜினி தற்போது மட்டும் அக்கறை இருப்பது போன்று நடந்து கொள்வது ஏன் என்று அவரை கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள்.

 

 

வீடியோக்கள் 
பரபரப்பு

நீங்கள் நடிப்பை மட்டும் தொடருங்கள், அரசியல் வேண்டாம், உங்களுக்கு அது தெரியாது சரிபட்டும் வராது என்று ரஜினியிடம் தெரிவிக்கும் வீடியோக்கள், மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிடர் 
கணிப்பு

குஜராத் சட்டசபை தேர்தல் குறித்து கர்நாடகாவை சேர்ந்த ஜோதிடர் பிரகாஷ் அம்மனய்யாவின் கணிப்பு மிகச் சரியாக இருந்தது. இந்நிலையில் அவர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தும் கணித்துள்ளார்.

 

முதல்வர் 
வேட்பாளர்

ரஜினி முதல்வர் வேட்பாளராக களத்தில் இறங்கினால் அவர் கட்சி நிச்சயம் வெற்றி பெறாது. அவர் வேறு யாரையாவது முதல்வர் வேட்பாளராக்கினால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று பிரகாஷ் கணித்துள்ளார்.


சர்ச்சை நடிகை 
ஆவல்

ரஜினியின் கட்சியில் சேர ஏகப்பட்ட நடிகைகள் ஆவலாக இருந்தாலும் சர்ச்சை நடிகை தான் பேராவலாக உள்ளாராம். நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் அவரை முதல்வர் வேட்பாளராக ரஜினி அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெண்களே தயவு இவற்றை மட்டும் வீடுகளில் மறந்து கூட செய்யாதீர்கள்