அதனால் தான் அவர் அஜீத் நீலாங்கரை குழந்தைகள் இல்ல நிர்வாகி நெகிழ்ச்சி

சென்னை: மகளின் பிறந்தநாள் அன்று அஜீத் நீலாங்கரையில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருப்போருக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார்.

அஜீத்தின் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அனோஷ்காவின் பிறந்தநாளை அஜீத் ரசிகர்கள் போஸ்டர் அடித்து, பேனர் வைத்து, கேக் வெட்டி ஜமாய்த்துவிட்டார்கள்.

அதிலும் குறிப்பாக மதுரையில் கொண்டாட்டம் பெரிய அளவில் நடந்துள்ளது.

மதுரை 
ரசிகர்கள்

மதுரையை சேர்ந்த அஜீத் ரசிகர்கள் அனோஷ்காவின் பிறந்தநாளை தல பிறந்தநாள் அளவுக்கு சிறப்பாக கொண்டாடியுள்ளனர். முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளனர்.


பிரியாணி 
குழந்தைகள் இல்லம்

நீலாங்கரையில் உள்ள ஜியா குழந்தைகள் இல்லத்திற்கு நேற்று இரவு பிரியாணி அனுப்பி வைத்துள்ளார் அஜீத். இதை இல்லத்தின் நிர்வாகி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.


நீலாங்கரை 
குழந்தைகள்

இன்றிரவு நம் நீலாங்கரை இல்ல குழந்தைகளுக்கு திடீர் சர்ப்ரைஸாக அஜீத் வீட்டிலிருந்து பிரியாணி வந்திருக்கிறது. எனக்கே நம்பமுடியாமல் எப்படி? என கேட்டேன். அவரை இதுவரை சந்தித்ததுகூட இல்லை. புத்தாண்டு கொன்டாட்டத்திற்கு வந்திருந்த ஒரு பெண் நண்பரின் தந்தை அஜீத்திடம் வேலை செய்வதாகவும், எதேச்சையாய் நமது இல்லத்தை பற்றி அறிந்து உடனே பிரியாணி ஏற்பாடு செய்து தனது ட்ரைவரின் மூலம் கொடுத்தனுப்பியிருக்கிறார் நடிகர் அஜீத்! (இன்று அவரது மகளின் பிறந்த தினம் என்பதை சற்றுமுன்பு தான் அறிந்துகொண்டேன்

 

போஸ்ட் 
நன்றி

அஜீத் பற்றி இதுபோல நிறைய விசயங்களை கேள்விபட்டிருக்கையில், அது நமக்கே நடப்பது ஒரு இனிமையான அனுபவம்.

நமக்கே சந்தோசமாய் இருக்கும்போது பசங்களின் சந்தோசத்தை கேட்கவும் வேண்டுமா? அவர் செய்தது மிகச்சிறிய விசயம் தான். ஆனால் அதை எல்லோரும் செய்துவிடுவதில்லையே! அதனால் தான் அவர் அஜீத்! நன்றி! On behalf of all the children from Ziya Children's Home என அந்த நிர்வாகி தெரிவித்துள்ளார். இந்த போஸ்ட்டை அஜீத் ரசிகர்கள் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து வருகிறார்கள்.

உங்கள் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை ஒரு நொடியில் இணைக்கலாம் இதோ எளிய வழிமுறை