உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா மாணவிக்காக மனமிறங்கிய கலெக்டருக்கு ஏன் இந்த கோபம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததை அடுத்து, அந்தப் பள்ளியின் ஆசிரியர்களை ஆட்சியர் கந்தசாமி சரமாரியாக கேள்வி எழுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வி துறைக்கு பல நலதிட்டங்கள் மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்களது தலைமையில் வழங்கப்பட்டது.

விழாவில் செய்யார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 10ஆம் வகுப்பில் 491 மதிப்பெண் பெற்றதை பாராட்டி கல்வி உதவி தொகை மாவட்ட ஆட்சியர் மூலம் மாணவிக்கு வழங்கப்பட்டது.

அந்த மாணவி மோனிஷா மாவட்ட ஆட்சியரிடம் " நான் படித்து உங்களை போல மாவட்ட ஆட்சியர் ஆக போகிறேன்" என்றார்.

உடனே நம் ஆட்சியர் " வாழ்த்துக்கள் மோனிஷா! என் காரில் என் இருக்கையில் உட்கார்ந்து கொள்" என கூறி யாரும் எதிர்பாராத நிலையில் அந்த மாணவியை சற்று நேரம் ஆட்சியரின் சைரன் பொருத்திய அரசு காரில் தன் இருக்கையில் அமர வைத்து தான் நின்று கொண்டு அந்த மாணவியை புகைப்படம் எடுக்க சொன்னார்.

பின்னர் அந்த மாணவியிடம், " இந்த புகைப்படத்தை நீ பார்க்கும் போதெல்லாம் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற உத்வேகம் எப்போதும் இருக்கும்.நானும் உன்னை போல்தான் அரசு பள்ளியில் படித்துதான் மாவட்ட ஆட்சியராக உயர்ந்தேன்" என்றார்.

இந்த காட்சி ஊடகங்களில் பரவி கலெக்டருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பான தகவல் முதலில் நம் செய்திபுனல் தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மற்றும் ஒரு அதிரடி நடவடிக்கையை கல்வி நலனுக்காக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முன்னெடுத்துள்ளார்.

திருவண்ணா மலை மாவட்டம், ராந்தம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீரென ஆய்வு நடத்தினார்.

பின்னர் செய்யாறு அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

அப்போது 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் ஏன் குறைந்தது என அவர் கேள்வி எழுப்பியதற்கு ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டியதால் ஆட்சியர் ஆத்திரம் அடைந்தார்.

6ஆம் வகுப்பில் இருந்தே முறையாக கற்றுக் கொடுத்து இருந்தால் 12ஆம் வகுப்பு மாணவனுக்கு ஏன் இந்த நிலை ஏற்படுகிறது என்று அவர் கடிந்து கொண்டார்.

ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை மட்டும் தனியார் பள்ளியில் சேர்த்து விட்டு விட்டு, அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகளை சரியாக கவனித்துக் கொள்வதில்லை என்று கூறினார்.

இதனால் தான் தனியார் பள்ளிகள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் கண்டித்தார். ஆசிரியர்கள் மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார்.

மீண்டும் அஜித்துடன் இணையும் அனிருத் அப்போ யுவன் அதிர வைக்கும் விஸ்வாசம் அப்டேட்