சூர்யா விட்டுக் கொடுத்த ஐந்து கோடி

நல்ல நேரத்தில் பூஜை போட்டாலும், ராகு காலம் புடை சூழதான் வெளிவருகிறது எல்லா படங்களும்! சூப்பர் படமோ? சுமார் படமோ? கட்டையை போடுவதற்கென்றே வருகிற ஒரு கூட்டம், அப்படத்தின் சுக பிரசவத்தை கேள்விக்குறியாக்கிவிடும். தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கும் அப்படியொரு வலி. கடந்த பல மாதங்களாகவே பேச்சு வார்த்தைகள் போய் கொண்டிருக்கின்றன. அது இன்னும் தீவிரம் பெற்றுள்ளது சில தினங்களாக.

பைனான்சியர் அன்புச்செழியனுக்கு தர வேண்டிய பாக்கி, அது தொடர்பான பஞ்சாயத்துகள் என்று கசக்கி பிழிகிறார்களாம் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை. இந்த பிரச்சனைகளை சமாளிப்பதற்காகதான் அவர் விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் நின்றார். அந்தோ பரிதாபம். லட்சக்கணக்கில் பணம் செல்வானதே தவிர, வெற்றி வாய்ப்பு நழுவிப்போனது.

இதையும் மனதில் வைத்துக் கொண்டு அவருக்கு நெருக்கடி கொடுக்கும் சக்திகளால் துவண்டு போயிருந்த ஞானவேல்ராஜாவுக்கு ஒரு ஆறுதல். தனது சம்பளத்தில் சுமார் 5 கோடியை விட்டுக் கொடுத்திருக்கிறாராம் சூர்யா.

பொங்கலுக்கு இனிப்பு கிண்டிடுவீங்களா ஞானவேல்ராஜா?

தொலைக்காட்சியுடன் கை குலுக்கும் அஜீத் கோடம்பாக்கத்தில் பரபரப்பு