தொலைக்காட்சியுடன் கை குலுக்கும் அஜீத் கோடம்பாக்கத்தில் பரபரப்பு

நம்புனவங்களை நட்டாத்துல விடுற வழக்கம் எங்க தல-க்கு இல்ல… என்று அஜீத்தின் ரசிகர்கள் மார்தட்டிக் கொள்ளலாம். ஏன்? சிவாவுக்காக அஜீத் போடுகிற ஸ்கெட்ச் அப்படி. விவேகம் படத்தின் கலெக்ஷனில் துவங்கி, விமர்சனம் வரைக்கும் அஜீத் ரசிகர்களை தவிர மீதி அத்தனை பேருக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் ‘என் தல- இமயமல…’ என்று பேசி கொஞ்சம் கூட சுருங்குவதற்கு தயாராக இல்லை ரசிகர்கள். இருந்தாலும் சிவாவுடன் திரும்பவும் அஜீத் இணைவதற்கு அவர்கள் பச்சைக் கொடி காட்டுவார்களா? என்கிற கேள்வி இருந்த நிலையில், ‘நீங்க என்ன காட்றது? நானே காட்றேன்’ என்று கிளம்பியிருக்கிறார் அஜீத்.

ரெகுலராக தமிழில் படம் தயாரிக்கிற தயாரிப்பாளர்கள் மீண்டும் இந்த காம்பினேஷனை விரும்பப் போவதில்லை. அதற்காக சிவாவை விட்டுவிடவா முடியும்? இந்த நேரத்தில் ஓரெழுத்து ஆங்கில எழுத்துச் சேனல் ஒன்று அஜீத்தை நாடியதாம். “16 வயதினிலே மயிலு கணவர் போனிக்கபூருடன் இணைந்து தமிழ் படங்கள் சிலவற்றை தயாரிக்கிற முடிவில் இருக்கோம். முதல் சைன் உங்களிடமிருந்து வேணும்” என்றதாம். நன்றாக யோசித்து பார்த்த அஜீத், மேற்படி சேனலுக்கு ஓகே சொல்லியிருக்கிறாராம்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் படம் தயாரிக்கும் போது ஆயிரம் சவுகர்யங்கள் உண்டு. முதல் சவுகர்யம், பணத்தை அள்ளிக் கொட்டுவார்கள். எதிலும் கோடு போட்டது போல சரியாக நடந்து கொள்வார்கள். பேசிக்கலாகவே கார்ப்பரேட் ஒழுங்கு உள்ளவர் அஜீத். அப்புறமென்ன? க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம்.

ஆக, சிவாவுக்கு நல்ல நேரம் இன்னும் முடியல!

ஐஸ்வர்யா ராய் என் அம்மா புயலை கிளப்பிய ஆந்திரா வாலிபர்