ஐஸ்வர்யா ராய் என் அம்மா புயலை கிளப்பிய ஆந்திரா வாலிபர்

மங்களூரு: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் என் அம்மா, அவர் என்னுடன் வந்து வசிக்க வேண்டும் என ஆந்திரா வாலிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர் சங்கீத் ராய் குமார்(29). பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னை பெற்றெடுத்த தாய் என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

லண்டன் 
பிறப்பு

ஐஸ்வர்யா ராய் செயற்கை கருத்தரித்தல் முறை மூலம் லண்டனில் என்னை 1988ம் ஆண்டு பெற்றெடுத்தார்.(அதாவது உலக அழகிப் பட்டம் வெல்ல 6 ஆண்டுகளுக்கு முன்பே ஐஸ் தாயாகிவிட்டார் என்கிறார்). நான் மூன்று முதல் 27 வயது வரை சோடவரத்தில் இருந்தேன்.


மும்பை 
பாட்டி

ஒன்று மட்டும் இரண்டு வயதுகளில் நான் மும்பையில் என் பாட்டி பிருந்தா ராய் குடும்பத்துடன் இருந்தேன். என் தாத்தா கிருஷ்ணராஜ் ராய் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலமானார்.(அவர் மார்ச் மாதம் காலமானார்)

ஐஸ்வர்யா 
திருமணம்

என் அம்மா ஐஸ்வர்யா ராய்க்கு 2007ம் ஆண்டு அபிஷேக் பச்சனுடன் திருமணமானாலும் அவர் தற்போது தனியாக வசித்து வருகிறார். அவர் மங்களூருக்கு வந்து என்னுடன் வசிக்க வேண்டும்.

மிஸ் 
ப்ளீஸ்

27 ஆண்டுகள் பிரிந்துவிட்டேன். என் அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். என் அம்மாவின் செல்போன் எண்ணையாவது என்னிடம் அளிக்க வேண்டும். எனக்கு என் அம்மா வேண்டும் என்கிறார் சங்கீத் ராய் குமார். ஐஸ்வர்யா தனது தாய் என்பதை நிரூபிக்க அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

30 ஆண்டுகளுக்கு பிறகு உலகில் எங்குமே சாக்லேட் இருக்காது வெளியான அதிர்ச்சி தகவல்