பெண் ஆர்.ஜே.வுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கின்னஸ் சாதனை பாடகர் கைது

ஹைதராபாத்: தன் ரேடியோ நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் கெசிராஜு ஸ்ரீனிவாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல தெலுங்கு பாடகர் கெசிராஜு ஸ்ரீனிவாஸ். அவர் ஆலயவாணி வெப் ரேடியோ நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் 29 வயது பெண் ஆர்.ஜே. ஸ்ரீனிவாஸ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஸ்ரீனிவாஸ் கடந்த 9 மாத காலமாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஸ்ரீனிவாஸை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தான் அந்த பெண்ணிடம் ஒருபோதும் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

கஸல் பாடல்களை தெலுங்கில் பாடுவதற்கு பிரபலமானவர் ஸ்ரீனிவாஸ். மேலும் கடந்த 2008ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 76 மொழிகளில் பாடி கின்னஸ் உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தல அஜித்திற்கு பிடித்த தளபதி விஜய் படம் இது தானாம்