புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டிரம்பின் மனைவி அணிந்த விலை உயர்ந்த கவுன்

நம் நாட்டில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது புத்தாடை அணிந்து வெகு விமர்சையாக கொண்டாடுவோம்.

அதே போன்று மேற்கத்திய நாடுகளில் காத்திருந்து அதிகளவில் செலவு செய்து புத்தாடை அணிந்து ஆங்கில புத்தாண்டை விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.

அப்படி இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி அனிந்திருந்த விலை உயர்ந்த கவுன் அனைவரது மனதிலும் நிற்கும் அளவில் அமைந்திருந்தது.

டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப் மற்றும் அவர்களது மகன் உள்ளிட்டோர் ஃபுளோரிடாவில் உள்ள பால்ம் கடற்கரையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் மெலானியா டிரம்ப் அணிந்திருந்த கவுனின் விலை 2.75 லட்சம் ரூபாயாகும். அந்த கவுன் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது. 

மேலும், நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களினால் ஆன பூ கை வேலைப்பாடுகளில் அமைந்துள்ளது. இதனை மிகவும் பிரபலமான ஆடை வடிவமைப்பு நிபுனரான எர்டெர்ம் தயாரித்துள்ளார்.

டிரம்ப் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பதாலும், அமெரிக்காவின் அதிபர் என்பதாலும் அவருடைய மனைவி அணிந்திருந்த விலை உயர்ந்த உடை சாதாரணமாக இருக்கலாம். 

இருந்தாலும் அது அந்நாட்டில் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. மேலும், சிலர் அரசு செலவில் இப்படி ஆடம்பரமாக இருப்பதாக கூற்றஞ்சாட்டி வருவதால் சர்ச்சையாகியுள்ளது.

என்னவென்றே தெரியாமல் லட்ச கணக்கில் செலவு செய்யும் பெண்கள் ஊளைச் சதை பண்ற வேலை தான்