அரசியலுக்கு வரும் ரஜினி முதலில் இதற்கு பதில் சொல்வாரா சாமானியனின் நெத்தியடி கேள்விகள்

“உழைத்தவன் வியர்வை நிலத்தில் விழும் முன், அவன் கூலியைக் கொடுத்து விட வேண்டும்”. அது தான் தர்மம். இதை அடிப்படையாக வைத்து ரஜினி நடித்த படங்களில் எல்லாம், தொழிலாளர்களின் கூலியைப் பெற்றுக் கொடுப்பதற்காக, முதலாளிகளிடம் போராடுவார். பல பஞ்ச் டயலாக் எல்லாம் பேசுவார். தொழிலாளர்களுக்கு, உயிரையே கொடுப்பது போல் நடித்திருப்பார்.

இப்படிப்பட்ட காட்சிகள் எல்லாம் அவரது படங்களில் சர்வ சாதாரணமாக, அவருக்காக, கதாசிரியரும், வசனகர்த்தாவும், இயக்குநர்களும் உருவாக்குபவை. அவர் நடித்த படங்களில் இப்படித் தொழிலாளர்களாக நடித்த துணை நடிகர்கள் வாங்கும் சொற்ப சம்பளம் எவ்வளவு என்றாவது அவருக்குத் தெரியுமா?

அந்தத் துணை நடிகர்கள் வாங்கும் மிக சொற்ப சம்பளத்தை அதிகப் படுத்த வேண்டும் என்று, இன்று வரை ஒரு வார்த்தை கூட பேசியதில்லை ரஜினி. அவர் மட்டும் படத்துக்குப் படம் தன் சம்பளத்தைக் கோடிக் கணக்கில் கூட்டிக் கொண்டிருப்பார். அவர் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியுமா? 

அவர்களின் நலனுக்காக, அவரால் இயன்ற அளவில் கூட எந்த உதவியும் செய்ததில்லை. சினிமாவில் சிவாஜி பெரிய கருமி என்பது திரைப்படத்துறையினர் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவரை விட அதிகக் கருமியானவர் ரஜினிகாந்த். இதுவும் அவரை வாழ வைத்துக் கொண்டிருக்கும் திரைத் துறையினருக்குத் தெரியும்.

அவருக்கு, அவர் வாங்கும் அளவிட முடியாத கோடிக் கணக்கான ரூபாய் சம்பளம் தான் முக்கியம். மற்றவர்களைப் பற்றி அக்கரை கொள்ள, அவருக்கு நேரம் இல்லை. அப்படிப்பட்டவர், தமிழக மக்களுக்கு என்ன செய்து விடப் போகிறார், என்று பல சினிமா பிரமுகர்களே சொல்லி வருகின்றனர். 

ஏதாவது பொது நிவாரணத்திற்காக, மக்கள் தங்களைத் தள்ளி வைத்து விடக் கூடாது, நம் பிழைப்பு போய் விடும், என்ற எண்ணத்தில், எல்லா நடிகர்களும் ஒரு தொகையை விளம்பரத்திற்காக கொடுப்பார்கள். அப்போது மட்டும், மக்கள் மனதில் நன்மதிப்பைப் பெறுவதற்காக, இவரும் ஒரு தொகை கொடுப்பார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தின் ஒரு சதவீதமாகக் கூட அந்தத் தொகை இருக்காது என்பது தான் கொடுமையான விஷயம். இன்று இவர் வாழ்ந்து கொண்டிருக்கும், ராஜ போக வாழ்க்கை, கோடிக் கணக்கான ரூபாய் சொத்துக்கள், எல்லாம் தமிழர்களாகிய நாம், அவர் நடித்த சினிமாவைப் பார்க்க கொடுத்த பணம் தான்.

சில மாதங்களுக்கு முன்பாக, ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆஸ்ரம் என்ற பள்ளியில் பணி புரிந்த ஆசிரியர்கள் மற்றும் அந்தப் பள்ளியில் பணி புரியும் ஊழியர்கள் எல்லாம், தங்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் தரவில்லை என்று போராட்டம் நடத்தினார்கள். ஆறு மாதமாக அந்த ஊழியர்கள் எப்படி சிரமப்பட்டிருப்பார்கள் என்பது ரஜினிக்குத் தெரியாதா?

இல்லை, அந்த ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ரஜினியிடம் பணம் இல்லையா? மனம் இல்லை. தனது மனைவி நடத்தும் பள்ளியில் இப்படி ஒரு அவல நிலை நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டு கொள்ளாத ரஜினிக்கு, அன்றாடம் செத்துப் பிழைக்கும், அடித்தட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை எப்படித் தெரிந்து கொண்டு, அதற்கான தீர்வை அளிப்பார்?

லதா ரஜினிகாந்த் வாடகைக்கு எடுத்திருக்கும், நகராட்சி கட்டிடத்திற்கு மூன்று ஆண்டுகளாக வாடகையே தராமல், சென்னை கார்ப்பரேசன் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதெல்லாம் சரியான சிஸ்டமா? ரஜினிகாந்த் நல்ல மனிதர். ஆதனால் சம்பளம் எல்லாம் சரியாகத் தந்து விடுவார்கள் என்று நம்பித் தானே, அவர் மனைவி நடத்தும், ஆஸ்ரம் பள்ளியில் பணி புரிபவர்கள் நினைத்திருப்பார்கள். மேலும், இங்கு பணி புரிவதைப் பெருமையாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், வேலையை வாங்கிக் கொண்டு, அதற்கான சம்பளத்தைக் கூட கொடுக்க மனம் இல்லாதவர்களிடம் எப்படி வேலை பார்ப்பது என்று அவர்களில் பலர், போராட்டம் நடத்திய போது பத்திரிகைக்கு வெளிப்படையாகவே பேட்டி அளித்திருக்கிறார்கள். இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா ரஜினி சார்? உங்க வீராப்பெல்லாம், வெறும் சினிமா வசனத்தில் மட்டும் தானா?

ரஜினியின் மனைவி நடத்தும் பள்ளிக்கும், ரஜினிக்கும் சம்பந்தமே இல்லையா? இதெல்லாம் எனக்குத் தெரியாது என்று ரஜினி சொல்வாரா? முதலில் ரஜினி அவரைச் சுற்றியுள்ள சிஸ்டத்தை எல்லாம் சரி செய்யட்டும். அப்புறம், இவர் தமிழ்நாட்டு அரசியல் சிஸ்டத்தை மாற்றுவதைப் பற்றி யோசிக்கட்டும்!

அடக்கருமமே டப்ஸ் மாஷ்சில் பண்ணும் காரியமா இது பலபேர் முன்னிலையில் பார்த்து ஓடும் பெண்கள்