புத்தாண்டை முன்னிட்டு ரவுடிகளை அழைத்து போலீஸார் செய்த செயல் இப்படியெல்லாம் நடக்குமா

புத்தாண்டை முன்னிட்டு ரவுடிகளை அழைத்து நல்வழிப்படுத்தும் செயலில் ஈடுபட்ட கர்நாடக போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கர்நாடக மாநிலம் அத்திப்பலே காவல்துறையினர் கடந்த டிசம்பர் 31-ம் தேதி அப்பகுதியை சேர்ந்த ரவுடிகளை அழைத்திருந்தனர்.

வழக்கமான விசாரணைக்காக அழைக்கப்பட்டது என்று, காவல் நிலையத்திற்கு வெளியில் வரிசையில் நின்றிருந்தனர். ஒருசிலர் தலை தொங்கப்போட்டு நின்றனர்.

அவர்கள் அனைவரும், கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள்.

ஆனால், அவர்கள் அனைவரும் எந்த ஒரு விசாரணைக்காகவும் அழைக்கப்படவில்லை. மாறாக அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவே அழைக்கப்பட்டிருந்தனர். 

அங்கு வந்த ஆய்வாளர் எல்.ஓய்.ராஜேஷ் கூறுகையில், ரவுடிகளாக யாரும் பிறப்பதில்லை. சூழ்நிலைகள் தான் அவர்களை இந்த மோசமான நிலைக்கு காரணமாக்குகிறது.

நாங்கள் பலரை சீர்திருத்தி வணிகர்களாகவும், நல்ல தொழில் செய்யவும் உதவி செய்துள்ளோம் என்றார். அவருடன் சர்ஜாபுரா எஸ்ஐ நவீன் குமார் மற்றும் அத்திபலே எஸ்ஐ கஜேந்திரா ஆகியோரும் இருந்தனர்.

பின்னர், ரவுடிகள் ஒவ்வொருவருக்கும் 'குருராஜ் கரஜாஜி' எழுதிய 'கருநாலு பா பெலாகே' புத்தகம் ஒன்றை கொடுத்து, அவர்களின் மணிக்கட்டில் ஒரு நூலை கட்டி உறுதிமொழி எடுத்துக்கொள்ள கூறினார்.

அப்போது இருவர் மட்டும் தங்களுக்கு படிக்க தெரியாது என்று கூறினர். அதனால், அந்த புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து சென்று வீட்டில் இருப்பவர்களை படிக்கச்செல்லி கேட்டுக்கொள்ள ராஜேஷ் அறிவுறுத்தினர்.

மேலும், அவர்களுக்கு மரக்கண்றுகளை கொடுத்து தினமும் தண்ணீர் ஊற்றி வளர்க்குமாறு கூறினர். அந்த மரம் வளர வளர நேர்மறை எண்ணங்கள் உருவாகும் என்றும், இனி எந்தவித குற்ற செயலிலும் ஈடுபடக்கூடாது என்றும் கேட்டுகொண்டார்.

அதே நேரத்தில், திருந்தி வாழ்பவர்களுக்கு கடனுதவி, வேலை வாய்ப்புகளை உருவாக்க தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.

இந்த 26 ரவுடிகளில் 5 பேராவது திருந்தி வாழ்ந்தால் அது நாங்கள் செய்த மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்று ராஜேஷ் கூறினார்.

புத்தாண்டை முன்னிட்டு ரவுடிகளை சீர்த்திருத்த முயற்சி செய்த அத்திப்பலே போலீஸாருக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்

அப்போ அம்மாவும் சூர்யாவின் அப்பாவும் இப்போ நானும் சூர்யாவும் பிரபல நடிகை ஓபன் டாக்