அப்போ அம்மாவும் சூர்யாவின் அப்பாவும் இப்போ நானும் சூர்யாவும் பிரபல நடிகை ஓபன் டாக்

நடிகர் விஜய்யின் பைரவா படத்திற்கு பின் நடிகை கீர்த்தி சுரேஷ் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை நானும் ரவுடி தான் என்ற படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார் .

இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் கூறுகையில், இந்தப் படத்தில் நான் ஒரு பிராமணப் பெண் வேடத்தில் நடிக்கிறேன். படத்தில் எனது கதாபாத்திரத்திற்குப் பெயரே கிடையாது. இதில் காமெடி கலந்த சஸ்பென்ஸ் வேடம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், நான் ஸ்கூல் படிக்கும்போதே சூர்யாவின் மிகப் பெரிய ரசிகை என்றும் எனது அம்மா சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமாருடன் 3 படத்தில் நடித்துள்ளார் என்றும் கூறினார்.

நான் ஸ்கூல் படிக்கும்போது நடிகர் சிவகுமார் சாரின் மகன் சூர்யாவுடன் ஒரு நாள் நிச்சயம் கதாநாயகியாக நடிப்பேன் என்று கூறியிருந்தேன். ஆனால் நான் அன்று சொன்னது  இன்று நிஜமாகியுள்ளது எனக்கு மிக மகிழ்ச்சி. சூர்யா மிகவும் அமைதியானவர். 

அதிகம் கூட பேச மாட்டார். ஆனால் அவரிடம் நான் சந்தேகம் கேட்கும்போதெல்லாம் எனக்கு சொல்லிக் கொடுத்து உதவுவார். மேலும் செந்தில் சாரோட நடித்தது ஒரு நல்ல அனுபவம். அவர் டெடி பியர் போன்று மிக கியூட்டான மனிதர். அவருடன் நடித்தது எனக்கு மறக்க முடியாத நல்ல அனுபவம் என்று கூறி தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் என்னிடம் கதை சொல்லும்போதே கதையும் அதில் எனது கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

விக்னேஷ் சிவன் சார் எனக்கு படப்பிடிப்பு இடத்தில் வைத்துத்தான் வசனத்தைக் கூறுவார். அதை நாங்கள் அங்கேயே டெவெலப் செய்து நடிப்போம். அவ்வாறு நடிக்கும்போது அது இன்னும் சூப்பராக  இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவதற்கு காரணம் என்ன தெரியுமா