ஜனவரியில் 12 ராசிக்காரர்களும் வீடு வாங்க, காதலை சொல்ல நல்ல நாட்கள் தெரியுமா

சென்னை: ஜனவரி மாதம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கும் எந்த நாளில் எப்படி இருக்கும் என்று பண்டிட் அனூஜ் சுக்லா டிசைன் செய்து சிறப்பான காலண்டர் வடிவமைத்துள்ளார்.

நம்முடைய வீடுகளில் பஞ்சாங்கம், நல்ல நேரம், பண்டிகைகளை சொல்லும் காலண்டர்களை பார்த்திருப்போம். லக்னோவைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் பண்டிட் அனூஜ் சுக்லா நமது ஒன் இந்தியாவிற்காக சிறப்பான காலண்டரை வடிவமைத்துள்ளார்.

ராசிகள், நட்சத்திரங்களின் அடிப்படையில் இந்த காலண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இதய சின்னம் பொறிக்கப்பட்ட நாளில் உங்கள் காதலை கூறலாம். அதே போல வீடு, வண்டி வாகனம் வாங்கலாம், பணம் வரும் நாட்களை அறிந்து கொள்ளலாம்.

காலண்டரில் இடம் பெற்றுள்ள சின்னங்களும் அதற்கான விளக்கமும்:

இதயம் : இந்த நாட்களில் காதலை சொல்லலாம்

மின்சாரம்: இந்த சின்னம் போட்டுள்ள நாட்களில் ஏதாவது ஆபத்து வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை.

வீடு: ஜனவரி மாதத்தில் வீடு, வண்டி, வாகனம் வாங்கலாம். பராமரிப்பு செய்யலாம்.

சிரிப்பு பொம்மை: இந்த நாளில் மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் அதிகரிக்கும்.

ப்ளூ ஸ்மைலி: இந்த சின்னம் போட்டுள்ள நாட்களில் உங்களுக்கு ஏதாவது சோகமான சம்பவங்கள் நடைபெறலாம்.

நட்சத்திரம்: இந்த சின்னம் போட்டுள்ள நாட்களில் அதிர்ஷ்டம் கூடி வரும்

நாணயம்: நாணயம் சின்னம் போட்டுள்ள நாட்களில் பணம் அதிகம் வரும் வாய்ப்பு உள்ளது.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களே... உங்களுக்கு இந்த மாதம் காதலை சொல்ல நிறைய நாட்கள் இருக்கிறது. ஜனவரி 2,5,6,9,14,26,29 தேதிகளில் காதலை சொல்லலாம். 4,12,17ஆம் தேதிகளில் நல்ல விசயங்கள் நடக்கும்.

 

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களே நீங்கள் இந்த ஆண்டு காதலை சொல்ல நல்ல நாள் ஜனவரி 29 மட்டுமே. ஜனவரி 3ஆம் தேதி வீடு வாங்க, பராமரிப்பு செய்ய நல்ல நாள்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் காதலை சொல்ல நல்ல நாட்கள் ஜனவரி 1,23,31. ஜனவரி 14 ஆம் தேதி பணம் வரும்.

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு மாதத்தின் முதல்நாளே அமோகமாக இருக்கிறது. 4,12,24,26 காதலை சொல்ல நல்ல நாட்கள்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு மாதத்தின் முதல்நாள் மகிழ்ச்சியாக தொடங்குகிறது. 10,14,16,26,31 ஆம் நாட்களில் காதலை சொல்லலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு 3,13,17 தேதி வீடு வாங்கலாம். 4,25,28 தேதிகளில் காதலை கூறலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு 3,13,17 தேதி வீடு வாங்கலாம். 4,25,28 தேதிகளில் காதலை கூறலாம்.

விருச்சிகம்

உங்களுக்கு மாதத்தின் முதல் நாளே காதலோடு தொடங்குகிறது. 28,31 நாட்களில் காதலை சொல்லலாம்.
12,17 தேதிகளில் வீடு வாங்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இம்மாதம் 6,11,24ஆம் தேதிகளில் காதலை சொல்லலாம். 26 ஆம் தேதி வீடு வாங்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இம்மாதம் 6,16,28 தேதிகளில் காதலை சொல்லலாம். 4,7,27 தேதிகளில் பணம் வரும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களே... இம்மாதம் 16ஆம் தேதி வீடு வாங்கலாம். 20,25,30ஆம் தேதி காதலை சொல்லலாம்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களே இம்மாதம் 2, 25,31 ஆம் தேதிகளில் காதலை சொல்லலாம். 28ஆம் தேதி வீடு வாங்கலாம். 14,27,30ஆம் தேதிகளில் அதிர்ஷ்டம் தேடி வரும்.

அஜித்தின் விசுவாசத்துடன் மோத தயார் அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா