புத்தாண்டு கொண்டாட்டத்தில் 35 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

ஆங்கில புத்தாண்டை இந்தியாவிலும் விமர்சையாக கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

அது மட்டும் அல்லாமல்., புத்தாண்டு விழா கொண்டாட்டத்தின் போது குடி கும்மாளம் என்று கலாச்சார சீர்கேடும் நடைபெற்று வருகிறது.

அதிலும் மும்பை., டெல்லி., பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்  போது பாலியல் அத்துமீறல்கள் நடப்பது அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று., 2018 ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் 
பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன.  

புத்தாண்டை கொண்டாடுவதற்காக பெங்களூரு பிரிகேட் ரோட்டில் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர். பெரும்பாலானோர் குடிபோதையில் ஜோடி ஜோடியாக வந்துள்ளனர். 

நள்ளிரவு 12 மணி ஆனதும் அனைத்து இளம்ஜோடிகளும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து புத்தாண்டை வரவேற்றனர்.

அந்த நேரத்தில் அங்கு தனியாக வந்திருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் ஒரு கும்பல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளது.

சுமார் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கதறியபடி அங்கிருந்து தப்பித்து ஓடினார்.

இதனை பார்த்த போலீசார் அந்த பெண்ணை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சென்ற வருடத்திலும் பெங்களூரில் ஒரு பெண் மீது பாலியல் அத்துமீறல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

நமது கலாச்சாரத்தை மீறுவதால்தான் இது போன்ற விபரீதங்கள் நடைபெறுகின்றது என்பதை இளைஞர்களும் பெண்களும் கவனத்தில் கொள்ளவேண்டும். 

கட்சி ஆரம்பித்ததுமே கர்நாடகாவிலிருந்து கிளம்பியது ரஜினிகாந்த்துக்கு சத்திய சோதனை