ரஜினி சிறை செல்லாமல் இருந்தா சரி ராஜபக்சேவின் மகன் கருத்து

நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி தொடங்கி, அதன் மூலம் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து ரஜினிகாந்துக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பலர் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, ரஜினிகாந்த் பா.ஜ.க-வின் கைப்பாவை என்றும் விமர்சித்தும் வருகின்றனர்.

 

இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து நாமல் ராஜபக்சே தனது ட்விட்டர் பக்கத்தில், “என் தந்தைக்கு பிடித்த நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது சிறப்பான செய்தி. அவரின் அரசியல் வாழ்க்கை சினிமாவை போல் இருக்காது என நம்புகிறேன். சிவாஜி படத்தை போல நல்லது செய்ததற்காக அவரை சிறையில் அடைப்பதை நான் பார்க்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Image may contain: text

பிரபல திரையரங்கில் மெர்சலை முந்திய விவேகம்