அஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா

நடிகர் அஜித் நடித்த அமராவதி படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சங்கவி.

70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சங்கவி, தற்போது தனியார் தொலைக்காட்சியில் தாய் வீடு என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இதுகுறித்து ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அந்த சீரியலின் இயக்குனர் ஹரிராஜன், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்த சீரியல் உருவாகி வருவதாக கூறினார்.

தான் சங்கவியுடன் இரண்டு படங்களில் பணியாற்றியதாகவும், சமூக கருத்துக்கள் கொண்ட சீரியல் என்றதால் அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.

மேலும், அந்த சீரியலில் சங்கவி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதாகவும், பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் படமெடுக்கப்பட்டதாக ஹரிராஜன் கூறினார்.

நம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும் அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்