அய்யோ இப்படியா பிறக்கும் புத்தாண்டு சென்னையில் 150 பேர் மருத்துவமனையில் இரவாக நிகழ்ந்த துயரம்

சென்னை பெருநகரக் காவல் துறை சென்னை மாநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், கிளப், உணவு விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்தும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

புத்தாண்டு நள்ளிரவில் பிறந்ததையொட்டி சென்னை மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி புத்தாண்டை வரவேற்றனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் சென்ற 150க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு விபத்துகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை, ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்று மாலையிலேயே, சென்னை பெருநகரக் காவல் துறை மக்களிடம்,

குடிபோதையில் வாகங்களை ஓட்டுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

இரு சக்கர வாகனங்களில், அதிவேகமாக செல்வதற்கும், இரண்டு பேருக்கு மேல் அமர்ந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில், கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் எல்லை மீறும் செயல்களில் ஈடுபடக்கூடாது.

புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் கடல் நீர் அருகே செல்லக் கூடாது.

இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபடுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புத்தாண்டு வாழ்த்து கூறுவதன் பேரில் பெண்களை கேலி செய்தல், போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பட்டாசுகள் வெடித்தல் கூடாது.

விரும்பத்தகாத முறையில் கேலி மற்றும் கிண்டலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பிறர்மீது வர்ணப் பொடிகள் / வர்ணம் கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை பொதுமக்கள் தவிர்த்தல் வேண்டும்.

இருசக்கர வாகனம் மற்றும் கார்களை அதிவேகமாக ஓட்டிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் கடலில் விளையாடுதல் மற்றும் படகுகளில் ஏறி கடலுக்குள் செல்ல முற்படுவதை தவிர்த்தல் வேண்டும்.

புத்தாண்டை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட, சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள மேற்கண்ட வழிகாட்டுதழ்களை பின்பற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தது.

இருந்த போதிலும் சில இடங்களில் கட்டுப்பாடுகளையும் மீறி விபத்து நடந்துள்ளது.

நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ். இவருக்கு வயது 80. முன்னாள் இந்திய ராணுவ வீரரான இவர், பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ படத்தில் திரிஷாவிற்கு அப்பாவாக நடித்திருப்பார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் சில காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இவரது இறுதிச் சடங்கு நாளை மாலை நடக்க இருக்கிறது. இறுதி அஞ்சலிக்காக இவரது உடல் கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் அரசியல் வருகையால் கழற்றி விடப்பட்ட தினகரன் காரணம் இது தானாம்