நியூயோர்க் அடுக்குமாடி குடியிருப்பில் தீ 6 பேர் பலி

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க் நகரில் ப்ரொன்ங்ஸ் போரோ பகுதியில் அமைந்துள்ள கட்டடமொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கி மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்காக சுமார் 160 தீயணைப்பு படையினர் கடமையிலீடுபடுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என நியுயோர்க் பொலிசார் அறிவித்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகைளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

ரஜினி முகத்திரையை கிழித்த உயர்நீதிமன்றம் ஊருக்குத்தான் உபதேசம் இல்லை போல திருத்துக்கடா